உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய பொருளாதார நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன எனலாம்.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கமானது மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்தனர்.
இதற்கிடையில் புதிய பணியமர்த்தல் என்பதும் அந்த சமயத்தில் மிக மோசமான சரிவினைக் கண்டிருந்தது. இதனால் அங்கு வேலையின்மை நலன் விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது.
கொரோனா காலத்தில் மோசமான நிலை
இது குறித்து வெளியான தரவில் கொரோனாவின் வருகைக்கு பின்னர் அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையிழந்தனர். இதனால் அங்கு வேலையின்மை நலன் குறித்த க்ளைம் விகிதம் என்பது தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. இது அசாதாரண நிலையாகவே இருந்து வந்தது. கொரோனா ஆரம்ப காலத்தில் சிஸ்டம்கள் ஜாம் ஆகும் அளவுக்கு கோரிக்கைகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப விகிதம் சரிவு
இந்த நிலையில் தற்போது இந்த க்ளைம் விகிதமானது முதல் முறையாக 4 லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. இது பணியமர்த்தல் அதிகரித்து வருவதையும், பொருளாதாரம் மீண்டும் வருவதையுமே சுட்டிக் காட்டுகின்றது. இது மே 29வுடன் முடிவடைந்த வாரத்தில் 20,000 குறைந்து 3,85,000 என்ற லெவலுக்கு குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பணியமர்த்தல் அதிகரிப்பு
இதற்கிடையில் சமீபத்திய ஆய்வறிக்கையில், தனியார் அமெரிக்க நிறுவனங்கள் 9,78,000 வேலைகளை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளன. இது ஒரு வருடத்தில் மிக அதிகம். இதே தொழில்துறை கணிப்பு வெளியிட்ட அறிக்கையில், 6,55,00 வேலைகளை சேர்த்துள்ளதாக கூறப்பட்டது. எது எப்படியோ பணியமர்த்தல் என்பது கணிசமான அளவு ஏற்றத்தினைக் கண்டுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
நல்ல அறிகுறி தான்
எப்படி இருப்பினும் இந்த க்ளைம் விகிதம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வருகின்றது. இது அடுத்து வரும் மாதங்களிலும் இப்படியே தொடர்ந்தால், மிக நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. தற்போது கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், வரும் மாதத்தில் பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த க்ளைம் விகிதமும் குறையலாம் என்றே பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இது அமெரிக்காவுக்கு மிக நல்ல விஷயமே.


Click it and Unblock the Notifications