2017ஆம் ஆண்டுக் கனடாவின் எக்ஸ்பிரஸ் என்டரி இயர் குடியுரிமை திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற இந்தியர் எண்ணிக்கையில் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.
டிரம்பு தலைமையிலான அமெரிக்க அரசு "பை அமெரிக்கன், ஹையர் அமெரிக்கன்" திட்டத்தின் அடிப்படையில் USCIS அமைப்பு விசா கட்டுப்பாடுகளை அதிகளவில் விதித்து வரும் நிலையில் தற்போது இந்தியர்கள் கனடாவிற்குச் செல்லத் துவங்கியுள்ளனர்.

2017ஆம் ஆண்டுக் கனடாவின் எக்ஸ்பிரஸ் என்டரி இயர் குடியுரிமை திட்டத்தின் கீழ் சுமார் 86,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 42 சதவீதம் அதாவது 36,310 விண்ணப்பங்கள் இந்தியர்கள் செய்துள்ளனர்.
86,022 விண்ணப்பங்களில் சுமார் 65,401 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுக் கனடாவிற்கு வெளிநாட்டவர்களைத் தன் நாட்டிற்குக் கனடா வரவேற்றுள்ளது.
இப்பட்டியலில் அதிகக் குடியுரிமை பெற்றது இந்தியர்கள் தான், இந்தியாவைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா ஆகிய நாடுகள் உள்ளது.


Click it and Unblock the Notifications