படைகளை தயார்ப்படுத்தும் அமெரிக்கா..!! ஈரான் போரில் டிரம்பின் புது வியூகம் எடுபடுமா?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 8 மாதங்களாக போர் நடக்கிறது. தொடக்கத்தில் மிக தீவிரமாக இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி கொண்டன. ஜூன் மாதம் முதல் தொடர் தாக்குதல்கள் இல்லை என்றாலும் விட்டு விட்டு இரு நாடுகளும் சண்டையை தொடர்கின்றன.

ஈரான் போரால் கச்சா எண்ணெய் சப்ளை , எல்பிஜி சப்ளை தடைபட்டு இந்தியா உள்பட பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி கேஸ் விலை உயர்வு, உரங்களுக்கு தட்டுப்பாடு என கோடிக்கணக்கான மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த போர் எப்போது தான் முடியும் என அனைவரும் எதிர்ப்பர்க்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஈரான் மீது தீவிர தாக்குதலை நடத்த தயாராகி வருவதை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

படைகளை தயார்ப்படுத்தும் அமெரிக்கா..!! ஈரான் போரில் டிரம்பின் புது வியூகம் எடுபடுமா?

ஈரான் மீது தீவிர ராணுவ தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு துறையான பென்டகன், அமெரிக்க மத்திய கட்டளை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பின் குடியரசு கட்சி வலுப்பெறுமா இல்லை ஜனநாயக கட்சி வலுப்பெறுமா என்பதை தீர்மானிக்க போகிறது. இது டிரம்புக்கும் முக்கியமான ஒரு தேர்தல்.

Also Read

ஏற்கனவே ஈரான் போர் காரணமாக டிரம்பின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் இடைக்கால தேர்தல்களுக்கு முன்பு ஈரான் மீது பெரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சான் அன்டோனியோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் இனி எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இல்லை என கூறினார்.

இதற்கிடையில் பெண்டகன் போருக்கு தயாராகும் படி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய உத்தரவுக்கு குறிப்பிட்ட தொடக்க தேதி எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் மற்றும் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் தேர்தல்களுக்கு முன்பாகவே தாக்குதல்கள் நடத்தப்படலாம் என Axios செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் கூறி இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எரிசக்தி மையங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்காக கொண்டு கடுமையான குண்டுவீச்சுகளாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு படை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்காவுக்கு முன்னதாகவே ஈரான் தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பேசியது தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அதிபர் டிரம்பும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி வருகின்றனர். எனவே போர் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினால், அமெரிக்காவும் இஸ்ரேல் படைகளும் இணைந்து செயல்படும் என சொல்லப்படுகிறது.

Recommended For You

ஏற்கனவே பிரெண்ட் கச்சா எண்ணெய் 104 டாலராக விலை உயர்ந்துள்ளது. மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் நிச்சயம் கச்சா எண்ணெய் விலை இன்னும் உயரும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் பல பொருட்களின் விலைவாசி உயரும். ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்தன, ஆனால் அவை அனைத்துமே தோல்வி அடைந்ததால் யார் தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது என்ற கேள்வி எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+