டிரம்ப் முகத்திற்கு இவ்வளவு டிமாண்டா.. அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய காசு.. அப்படி என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

அமெரிக்கா பிரிட்டன் காலணி ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்து சுமார் 250 ஆண்டுகள் ஆன நிலையில் இதை கொண்டாடும் வகையில் அமெரிக்கா மின்ட் அதாவது நாணயங்களை அச்சிடிம் அமைப்பு 2026 Semiquincentennial அந்நாட்டின் அதிபரான டிரம்ப் முகம் கொண்ட 1 டாலர் நாணயத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இந்த நாணயத்தின் சிறப்பம்சம், அதன் முன்பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவப்படமும், பின்பக்கத்தில் முன்பக்கத்தில் மற்ற சிறப்பு நாணயத்தில் இருப்பது போல் LIBERTY, IN GOD WE TRUST போன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் Semiquincentennial அதாவது 250 வருடத்தை நினைவூட்டும் வகையில் 1776 - 2026 வருடத்தை பொறிக்கப்பட்டு உள்ளது.

 டிரம்ப் முகத்திற்கு இவ்வளவு டிமாண்டா..  அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய காசு.. அப்படி என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

US Mint என்ற நாணயத்தை அச்சடிக்கும் அமைப்பின் மூலம் அச்சிடப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது மக்களால் எளிதாக வாங்க கூடிய வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதை 1 நாணயமாக வாங்க முடியாது.

US Mint அமைப்பு இதை 25 நாணயங்கள் அல்லது 100 நாணயங்களாக தான் விற்பனை செய்கிறது. இதன் படி 25 நாணயங்களை வாங்குவோருக்கு சுமார் 61 டாலருக்கு விற்கப்படுகிறது. அதாவது 1 டாலர் நாணயத்தை 2.44 டாலருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதுவே 100 நாணயங்கள் கொண்ட பேக் வாங்கினால் 154 டாலருக்கு விற்கப்படுகிறது.

அமெரிக்காவின் 250வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்பெஷல் டிரம்ப் 1 டாலர் நாணயங்களை அமெரிக்க மின்ட் அமைப்பு 2.5 லட்சம் நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் நாணய சேகரிப்பாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியிருக்கும் காரணத்தால் வெளி சந்தையில் ஒரு நாணயம் 5 டாலர் வரையிலும், அடுத்த சில வருடத்திலும் இன்னும் கூடுதல் விலைக்கும் விற்கப்பட வாய்ப்புள்ளது.

டிரம்ப் தனது பிராண்டை தேர்தல் பிரச்சார காலத்தில் இருந்தே மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வந்தார், வாட்ச், புத்தகம், பேனா என பலவற்றை விற்பனை செய்து பிரச்சாரத்திற்கான நிதியை திரட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+