அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அடுத்த 'அடி'.. தொடரும் டிரம்ப் இம்சை..!
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் கையில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் திரும்பப் பெற்று அந்நாட்டுக் குடிமக்கள் அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் உடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக வெளிநாட்டுப் பணியாளர்களையும், மக்களையும் அமெரிக்காவை விட்டு வெளியேற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த டிரம்ப் அரசு, தற்போது எச்4 விசா பெற்ற வெளிநாட்டவர்களுக்கு முறையாக வழங்கப்பட்ட Work permit-ஐயும் ரத்துச் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
இதற்கான அறிக்கையை வாஷிங்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் தலைமையிலான அரசு விவரித்துள்ளது.
பிப்ரவரி 2015
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா அவர்களின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எச்-1பி விசா வைத்திருக்கும் நபரின் மனைவி அல்லது கணவனுக்கு (எச்-4 விசா வைத்திருப்போர்) அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி (Work permit) அளிக்கப்பட்டது.
இந்தியர்கள்
இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா கொண்டு வேலை பார்க்கும் அனைத்து நபர்களும் தங்களின் கணவன் மற்றும் மனைவிக்கு Work permit பெற முயற்சி செய்து, அமெரிக்காவில் தங்களுக்கான உரிமையைப் பெற்றனர்.
முதல் வழக்கு
ஓபாமா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே SAVE JOBS USA என்ற அமைப்பு இந்த அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தொடுத்து. இந்த வழக்கில் எவ்வித உறுதியான மற்றும் பாதிப்புகள் அளிக்கும் குற்றச்சாட்டுகள் இல்லை என்ற காரணத்தால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே SAVE JOBS USA அமைப்பு மீண்டும் இந்த வழக்கை வாஷிங்டன் நீதிமன்றத்தில் தொடுத்தது.
தற்போது டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் சட்ட நிர்வாகத் துறை இந்த வழக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
60 நாட்கள் தடை
2017 பிப்ரவரி 1ஆம் தேதி SAVE JOBS USA அமைப்பு இந்த வழக்கை மீண்டும் தொடுத்து, தற்காலிகமாக 60 நாட்களுக்கு இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அனுமதிகளை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
குடியுரிமை பிரச்சனைகள்
அமெரிக்காவில் குடியுரிமை குறித்த பிரச்சனைகள் அனைத்தும் ஜெப் செஷன்ஸ் அமெரிக்கச் சென்னேட்டராக இருந்த காலத்தில் இருந்து துவங்கியது. எச்-4 விசா உடையவர்களுக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட விதிகள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை நேரடியாத பறிக்கும் ஒன்று என ஜெப் கூறினார்.
எதிர்ப்பு
இப்புதிய வழக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications