வடகொரியாவை சேர்ந்த ஐடி நிபுணர்கள் நூதன முறையில் அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை திருடுவது அம்பலமாகியுள்ளது. வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் சீனாவை சேர்ந்த டெவலப்பர்கள் வாயிலாக அமெரிக்காவில் இருக்கும் நபர்களை தொடர்பு கொள்கின்றனர். இவர்களுக்கு அமெரிக்க குடிமகனாக இருக்கும் நபரின் ஆவணங்கள், அடையாளங்கள் தான். இவற்றை பயன்படுத்தி ரிமோட் முறையில் அமெரிக்க அரசுக்கு ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களில் போலியான ரெஸ்யூம்களை தயாரித்து வழங்கி வேலைக்கு சேர்வார்கள்.
நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் நபரை வேலைக்கு அமர்த்தியதாக தான் நினைத்திருக்கும். ஆனால் இந்த ஹேக்கர்கள் அந்த நபர்களுக்கு ஒரு கமிஷனை கொடுத்து அவர்கள் கணினியின் கட்டுப்பாட்டை எடுத்து கொள்வார்கள். இதனை வைத்து கொண்டு அந்த நிறுவன தகவல்களை திருடுவார்கள். இப்படி தான் சலூன் கடை ஊழியர் ஒருவர் பெயரில் ஐடி ஊழியர் என ரெஸ்யூம் தயாரித்து 13 நிறுவனங்களில் ரிமோட் முறையில் வேலை பெற்று அமெரிக்க அரசின் தகவல்களை வடகொரிய ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

வாங் என்ற 40 வயதான சலூன் ஊழியர் ஒருவர் அண்மையில் ரிமோட் முறையில் வேலைக்கு சேர்ந்தாராம். அவரது புகைப்படத்தையும் ஆன்லைன் நேர்காணலில் பங்கேற்ற ஸ்கிரீன்ஷாட்டையும் ஒப்பிட்டு பார்த்த போது ஒரு நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் வசம் வேலைக்கு வந்தவர் உண்மையில் ஐடி நிபுணர் இல்லை என்பதும் சலூன் கடை ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் இதனை அடுத்து வாங் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர் 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவை சேர்ந்த 13 ஐடி நிறுவனங்களில் ரிமோட் முறையில் வேலை செய்திருக்கிறார். அதாவது இவரின் அடையாளங்களை பயன்படுத்தி வடகொரிய ஹேக்கர்கள் வேலை செய்துளனர்.
இதன் மூலம் அமெரிக்க அரசுக்காக வேலை செய்யும் ஐடி நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஹேக்கர்கள் ஊடுறுவி தகவல்களை திருடியுள்ளனர். இதற்காக தன்னுடைய அடையாளத்தை பயன்படுத்தி கொள்ள இவருக்கு 8 கோடி ரூபாயை கமிஷனாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 20 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வடகொரிய ஹேக்கர்கள் சீனாவை சேர்ந்த டெவலப்பர்கள் வாயிலாக அமெரிக்காவில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தில் சாப்ட்வேர் நிபுணர் என ரெஸ்யூம் தயார் செய்து அமெரிக்க அரசுக்காக ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களில் ரிமோட் வேலைக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அதை பயன்படுத்தி அரசின் தகவல்களை திருடுகின்றனர் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications