வாஷிங்டன்: அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே நடக்க உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் பல கட்டங்களில் நாட்டின் பொருளாதாரம் குறித்து வெள்ளை மாளிகையுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தை பிரிவின் ஆலோசனை குழுவின் முக்கிய பதவியில், இந்திய அமெரிக்க சீஇஓவான அஜய் பாங்கா-வை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.
மேலும் இவர் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் அமைப்பின் தலைவராவார். இந்த அறிவிப்பு இக்குழுவின் பிற மேலான்மை பொறுப்புகளை பற்றி அறிவிக்கும் போது தெரிவிக்கப்பட்டது.
ஒபாமா
இதுகுறித்து ஒபாமா கூறுகையில், திறமை மற்றும் அனுபவம் கொண்ட இவர்களின் பணி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் எனவும், அவர்களுடன் பணிபுரிவதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்தாக் அதிபர் ஒபாமா.
அஜய் பாங்கா
இவர் ஐஐஎம் அகமதாபாத் கல்லூரியில் தனது எம்பிஏ படிப்பை முடித்து அமெரிக்கா நிறுவனத்தில் சேர்ந்தால். பின்பு 2009ஆம் ஆண்டு முதல் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமான கருதப்படும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சீஇஓ வாக உள்ளார்.
பிற நிறுவனங்கள்
நெஸ்லே நிறுவனத்தில் தனது பணியை துவங்கிய இவர், மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு முன்பு சிட்டி குரூப் நிறுவனத்தில் பல உயர் பதவிகளில் இருந்தவர். அதுமட்டும் அல்லாமல் பெப்சிகோ நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.


Click it and Unblock the Notifications