வாஷிங்டன்: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக ரகுராம் ராஜன் வருவார் என்றும் அவரது பெயரும் பரிசீலனையில் உள்ளதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தவுடுபொடியாக்கும் வகையில் நேற்று அதிபர் டிரம்ப் தனது தேர்வு யார் என்பதை வெளியிட்டுள்ளார்.
ரகுராம் ராஜன் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை இரண்டாம் முறை தொடரப்போவதில்லை என்று எப்படி அறிவித்தாரோ அதே போன்று அமெரிக்க ஃபெடரல் ரிசர் வங்கி கவர்னரான ஜேனட் யெல்லென் கவர்னர் பதவியை நிராகரித்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் ஜெரோம் பவல் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக முன்மொழிந்துள்ளார்.
நாணய கொள்கை
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் யெல்லென் பதவி வகித்த போது நாணய கொள்கையில் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வந்தார்.
ஜெரோம் பவல்
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ள 64 வயது உடைய ஜெரோம் பவல் வழக்கறிஞர் மற்றும் முதலீட்டு வாங்கியாளர் ஆவார். 2012-ம் ஆண்டு அதிபராகப் பராக் ஓபாமா இருந்த காலத்தில் ஃபெடரல் வங்கியின் போர்டு உறுப்பினர் பதவிக்கு வந்தார்.
ஜேனட் யெல்லென்
2007-2009 இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அடித்த சூறாவளியினை எப்படி யெல்லென் சமாளித்து மீட்டரோ அதற்கு இணையான ஸ்மார்ட் மற்றும் உறுதியான தலைவருக்கான திறன் உள்ளதாக வெள்ளை மாளிகையில் டிரம்ப் பவல் பற்றி விளக்கம் அளித்தார்.
டிரம் பரிந்துரையின் நிலை என்ன
டிரம்ப் அவர்களின் பரிந்துரை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் செனட்டிற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை வட்டி விகிதத்தினை ஏற்றி அமைத்துள்ளது, மேலும் மீண்டும் ஒரு முறை மாற்றி அமைக்கும் திட்டமும் உள்ளதாகக் கூறப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications