கொரோனா பிரச்சனையை விட இவங்க தொல்லை தாங்க முடியல.. டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..!

வரலாறு காணாத அளவு சரிந்த கச்சா எண்ணெய் விலையை மேலும் தடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்கா ஜனாதிபதி சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவினை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடனான உரையாடல்களில் இந்த விவகாரத்தினை எழுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் போகிறோம். மேலும் நாங்கள் இணைந்து என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்க போகிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இது முதல் சந்திப்பு

இது முதல் சந்திப்பு

இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும். தேவைப்பட்டால் பொருத்தமான நேரத்தில் நானும் இணைவேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அவ்வாறு இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டால், அது சவுதியும் ரஷ்யாவும் ஓபெக் கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சந்திப்பு இதுவே முதலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

உற்பத்தியை உயர்த்த திட்டம்

உற்பத்தியை உயர்த்த திட்டம்

ஏனெனில் உற்பத்தி குறைப்புக்கு ரஷ்யா இணைந்து வராததால், அதே கோபத்தில் சவுதி அரேபியா எண்ணெய் விலையில் ஒரு யுத்தத்தினை கொண்டு வரும் வகையில், எண்ணெய் உற்பத்தியை ஏப்ரல் மாதத்தில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா அதன் வினியோகத்தினை ஒரு நாளைக்கு 12.3 மில்லியன் பேரல்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 9.7 மில்லியனாக இருந்தது.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

இதே நேரம் உலகின் பல பகுதிகள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பெரும்பகுதி ஊரடங்கினால் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான போக்குவரத்துகள் முடங்கியுள்ளன. இதனால் எரிபொருள் உபயோகம் குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் எரிபொருள் நுகர்வானது 15 மில்லியனில் இருந்து 22 மில்லியன் வரை குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலை இழந்து விடுவீர்கள்

தொழிலை இழந்து விடுவீர்கள்

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று வரலாற்றில் மிக மோசமான அளவு கச்சா எண்ணெய் விலை பதிவாகியுள்ளது. இவ்வாறு எண்ணெய் விலை குறைந்து வருவது இத்தொழிலுக்கு மேலும் பிரச்சனையைத் தான் கொண்டு வருகிறது. ஆக நீங்கள் ஒரு தொழில் துறையை இழக்க விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் அதற்கு மேல் ஒரு தொழிலை இழக்கப் போகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+