நாட்டின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே, தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகிறது.
அதுவும் வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை சொல்லவே வேண்டியதில்லை. இது சீனாவினை மட்டும் அல்ல, உலக நாடுகளையே பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி காண வழிவகுத்துள்ளது.
அப்போது சீனாவும் அமெரிக்காவும் நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கா மீது சீனாவும், சீனா மீது அமெரிக்காவும் மாறி மாறி வரியினை விதித்துக் கொண்டன.
முதல் கட்ட ஒப்பந்தம்
இதன் காரணமாக அப்போது உலக நாடுகளே பெரும் சரிவினை சந்தித்தன. இந்த நிலையில் கடுமையான போராட்டத்திற்கு பின்பே முதல் கட்ட ஒப்பந்தமானது வெற்றிகரமாக போடப்பட்டது. அதுவும் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் இந்த பிரச்சனையை ஊக்குவிக்கும் விதமாக தற்போது கொரோனா வந்துள்ளது.
சீனா பரப்பியிருக்கலாம்
கொரோனாவை பரப்பியது சீனா தான், சீனா நினைத்திருந்தால் கொரோனாவை சீனாவுடனேயே தடுத்திருக்கலாம்.ஆனால் அதனை செய்யவில்லை. இதற்காக ஒரு தனி குழு நிர்ணயிக்க உள்ளதாகவும், இந்த கொடிய கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரலாஜி லேப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அல்லது பரப்பப்பட்டிருக்கலாம் என்ற குற்றச் சாட்டும் இருந்து வருகிறது.
ஆர்வமில்லை
இதனையடுத்து அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அமெரிக்கா சீன இடையே முதல் கட்ட ஒப்பந்தமானது போடப்பட்டிருந்தாலும், இரண்டாவது ஒப்பந்தம் குறித்தான ஆர்வத்தினை இரு நாடுகளுமே அவ்வளவாக காட்டவில்லை எனலாம்.
இரண்டாவது கட்ட ஒப்பந்தம் பற்றி சிந்திக்கவில்லை
இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று, சீனாவுடனான ஒப்பந்தம் குறித்து தான் அவ்வளவாக சிந்திக்கவில்லை. பேச்சு வார்த்தை பற்றியும் யோசிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு ஏர்போர்ஸ் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் பத்திரிக்கையாளர்கள், சீனாவுடனான இரண்டாவது கட்ட ஒப்பந்தம் குறித்தான கேள்வியினை எழுப்பியபோது தான் அதனை பற்றி இப்படி கூறியுள்ளார்.
அமெரிக்கா சீனா உறவு மோசமடைந்துள்ளது
அதற்கு பதிலாக மனதில் வேறு பல விஷயங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான உறவு கடுமையாக மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் நினைத்திருந்தால் பரவலை தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications