ஜோ பைடன் புதிய முடிவு.. அமெரிக்க நிறுவனங்கள் கொண்டாட்டம்..!

அமெரிக்கா கொரோனா தொற்றுக்குப் பின்பு எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்சனைகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை தான். இந்நிலையில் இப்பிரச்சனையைச் சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இந்த வேளையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்தும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்பு கொரோனா தொற்றில் இருந்து வேகமாகப் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக 2 பொருளாதார ஊக்க திட்டத்தை அறிவித்தார். இதில் ஒன்று ஏற்கனவே ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்

இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில் விரைவில் மாபெரும் இன்பராஸ்டக்சர் மற்றும் சோஷியல் ஸ்பென்டிங் திட்டம் வரைவில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் எனத் தான் நம்புவதாக அறிவித்துள்ளார்.

 கார்பரேட் வரி

கார்பரேட் வரி

இது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த அமெரிக்க அரசு கார்பரேட் வரியை உயர்த்துவது குறித்துப் பலர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தனர்.

கார்பரேட் வரி உயர்வு இல்லை

கார்பரேட் வரி உயர்வு இல்லை

ஆனால் ஜோ பைடன் தலைமையிலான அரசு கார்பரேட் வரி உயர்த்தும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய மற்றும் பிற நாட்டு நிறுவனங்களுக்கும் முக்கியமானதாக விளங்குகிறது.

கூடுதல் வரி

கூடுதல் வரி

ஜோ பைடன் தலைமையிலான அரசு கார்பரேட் வரியை 21 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும், பணக்காரர்களுக்கு மீதான வரி, அதிகமாகச் செலவு செய்யும் போது விதிக்கப்பட்டும் வரி ஆகியவை முன்வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளூம் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வித்தியாசம் மட்டுமே உள்ள நிலையில் இன்பராஸ்டக்சர் மற்றும் சோஷியல் ஸ்பென்டிங் திட்டத்தில் 4 முதல் 5 பிரச்சனைகள் குறித்துத் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் வளர்ச்சி

அமெரிக்காவில் வளர்ச்சி

ஜோ பைடன் அரசின் 1.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இன்பராஸ்டக்சர் மற்றும் சோஷியல் ஸ்பென்டிங் திட்டம் மூலம் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் சோஷியல் ஸ்பென்டிங் திட்டம் மூலம் அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி நிலைமை பெரிய அளவில் மேம்படும்.

ஜோ பைடன் திட்டம்

ஜோ பைடன் திட்டம்

ஜோ பைடன் முதல் இன்பராஸ்டக்சர் மற்றும் சோஷியல் ஸ்பென்டிங் திட்டத்தை 3.5 டிரில்லியன் டாலர் அளவிலான திட்டமாக அறிவித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் விவாதம் மற்றும் எதிர்ப்புகள் மூலம் பல திட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இதன் மொத்த மதிப்பு 1.2 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+