டிரம்பின் அதிரடி முடிவு.. கவலையில் இந்திய ஊழியர்கள்.. என்ன தான் செய்யப் போகிறார்..!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை. வேலை வாய்ப்புகளிலும் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஹெச் 1பி விசாவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான செய்தியில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான செய்தியில், டொனால்டு டிரம்ப் இன்னும் இரண்டு நாட்களில் ஹெச் 1 பி விசா பற்றிய விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் தடை

அமெரிக்காவில் தடை

இதன் காரணமாக அமெரிக்காவில் வேலையின்மை விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டில் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றார்.

விதிமுறைகளில் கட்டுப்பாடு

விதிமுறைகளில் கட்டுப்பாடு

அதாவது அமெரிக்காவில் வேலை செய்ய கொடுக்கப்படும் ஹெச்1 பி விசாவில் விதிமுறைகளை கடுமையாக்க உள்ளதாகவும், ஒரு கட்டத்தில் தற்காலிமாக தடை செய்ய உள்ளதாக கூறி வருகின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஊழியர்களுக்கே அந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் வேலையின்மை விகிதம் குறையும் என்றும் கூறி வருகின்றார்.

யாருக்கு ஹெச் 1 பி விசா?

யாருக்கு ஹெச் 1 பி விசா?

இந்த ஹெச் 1 பி விசாவது நல்ல திறமையுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசாவாகும். குறிப்பாக ஐடி துறையில் உள்ள முக்கிய ஊழியர்களுக்கு இந்த விசாவானது அதிகளவில் வழங்கப்படுகிறது. அதிலும் ஹெச் 1 பி விசாவை பெறுவதில் இந்தியர்கள் தான் அதிகம். ஆக திங்கட்கிழமையன்று இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை பேர் பயன்?

எத்தனை பேர் பயன்?

இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 85,000 பேர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அதே போல தற்காலிகமாக குடியேற்றத்தினையும் தடை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

அமெரிக்கா அதிபர் டிரம்ப் சொல்வது போல் இந்த ஹெச் 1 பி விசா சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதில் முதலாவதாக பாதிக்கப்பட போவது இந்தியா தான். ஏனெனில் அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இதன் மூலம் பணிபுரிகின்றனர். மேலும் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கும் விசா காலம் முடிவடைந்தால், மீண்டும் புதுபிக்க முடியாமல் நாடு திரும்ப நேரிடும்.

பலத்த அடி தான்

பலத்த அடி தான்

இந்திய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்ல, ஐடி நிறுவனங்களுக்கும் இது பாதிப்பு தான், ஏன் சொல்லப்போனால் இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் பலத்த வீழ்ச்சி காணலாம். இப்படி சங்கிலித் தொடர்போல இந்தியாவுக்கு டிரம்பு ஒற்றை முடிவு பலத்த அடியை கொடுக்கலாம். .

ஹெச் 1 விசா

ஹெச் 1 விசா

அமெரிக்கா வழங்கும் விசாக்களில் குடியுரிமை உள்ள விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத விசா என இரண்டு வகைகளே பிரதானமானவை. இவர்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் குடியேற்ற உரிமையுள்ள விசாக்கள் வழங்கப்படும். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்குபவர்களுக்கு குடியேற்ற உரிமை அல்லாத விசாக்கள் வழங்கப்படும். H1B விசா குடியேற்ற உரிமை அல்லாத விசா வகையின் கீழ் வருகிறது.

ஊழியர்களுக்கான விசா

ஊழியர்களுக்கான விசா

இந்த ஹெச்1 பி விசாக்கள் பெரு நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக H1B விசாவிற்கு விண்ணப்பிக்கின்றன. சில நிறுவனங்கள் H1B விசாக்களை ஸ்பான்சர் செய்கின்றன. H1B விசா, வழங்கப்பட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது.

ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படலாம்

ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படலாம்

ஆக இதன் காரணமாக 1 லட்சம் பேர் அமெரிக்காவிலிருந்து புலம் பெயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஐடி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி ஊழியர்களில் பலரின் கனவே அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது தான். ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், இந்திய ஐடி ஊழியர்களின் கனவு எப்படி சாத்தியமாகும் என்பது தான் தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+