அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரக்கூடியவர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபர் பதவியேறிய மிக வயதான நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது . இதனை அடுத்து டிரம்புக்கு அரியவகை நோய் இருப்பதாகவும் கை கால்கள் வீக்கம் அடைந்து இருப்பதாகவும் புகைப்படங்களோடு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த சூழலில் தான் டிரம்பின் உடல்நிலை தொடர்பான ஒரு அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டு இருக்கிறது .

அமெரிக்க அதிபராக பதவி வகிப்பவர்களின் உடல் நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டிரம்பின் உடல்நிலை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
டிரம்பின் உடல்நிலை சிறப்பான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .வால்டர் ரீடு மருத்துவ மையத்தில் டிரம்பின் உடல் முழு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் ஒரு அதிபராக அனைத்து வேலைகளையும் மேற்கொள்வதற்கு ஃபிட்டாக இருக்கிறார் என அறிக்கை தரப்பட்டிருக்கிறது . எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் டிரம்ப் ஒரு அதிபராக தன்னுடைய அன்றாட வேலைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் டிரம்பின் இதயம் மிக வலுவாக இருக்கிறதாம், இசிஜி மூலம் அவருடைய இதய செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் அவருடைய உடல் வயதை விட அவருடைய இதயத்தின் வயது 14 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதயம் மட்டும் இல்லாமல் நுரையீரல் , நரம்பு மற்றும் அனைத்து உடல் பாகங்களும் முறையாக செயல்படுகின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் பதவி ஏறிய மிக வயதான நபர் என்ற பெருமை டிரம்புக்கு கிடைத்திருக்கிறது. 79 வயதாகும் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக அவருக்கு முழு உடல் பரிசோதனை என்பது செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து தற்போது அக்டோபர் மாதத்தில் இரண்டாவது பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார் .
முன்னதாக சில நரம்பியல் பிரச்சனை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கால்களில் வீக்கம் இருந்ததை வெள்ளை மாளிகையே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால் இது வயதாவதால் ஏற்படக்கூடிய பிரச்சனை என்பதால் பயப்படுவதற்கு ஒன்றும் தேவையில்லை என கூறியது. வர்த்தக போர், அதிரடி அறிவிப்புகள் டிரம்ப் தன்னுடைய செயல்பாடுகளால் நாள்தோறும் செய்திகளில் இடம்பிடிப்பவர்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications