வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஞாயிற்று கிழமையன்று ஒளிப்பரப்பட்ட ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், அமெரிக்க பொருட்களை வாங்கும் சீனாவிலிருந்து, அமெரிக்கா பொருளாதாரத்தினை துண்டிப்பதற்கான வாய்ப்பினை பற்றி கூறியுள்ளார்.
இது குறித்தான வீடியோ பகுதியில், நாங்கள் சீனாவுடன் வியாபாரம் செய்யத் தேவையில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். அவர்கள் எங்களை சரியாக நடத்தாவிட்டால், நிச்சயமாக நான் அதை செய்வேன் என்றும் எச்சரித்துள்ளேன்.
டிரம்ப் ஜனவரி மாதம் முதல் கட்ட ஒப்பந்தத்தினை எட்டுவதற்கு முன்பு, சீனாவுடனான அதிக பங்கு வர்த்தக போரில் நுழைந்தார். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று முதல் கட்ட ஒப்பந்தம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அதனையும் தடை செய்தார்.
பெய்ஜிங் நடவடிக்கை பிடிக்கவில்லை
இது இப்படி எனில், இரண்டாம் கட்ட ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைக்கே இடமில்லாமல் போனது. ஏனெனில் பெய்ஜிங் கொரோனாவை கையாள்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். ஆக இப்போதைக்கு இரண்டாம் கட்ட ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு வழியே இல்லாமலேயே போனது எனலாம்.
டிக்டாக்கிற்கு எதிரான தொடர் நடவடிக்கை
இதற்கிடையில் இந்த பிரச்சனையை இன்னும் மெருகேற்றும் விதமாக, சீனாவின் டிக் டாக் பற்றிய டிரம்பின் சமீபத்திய உத்தரவுகளுக்கு எதிராக, நீதிமன்றத்தினை நாட போவதாக டிக் டாக் செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்.
வெறும் 90 நாட்கள் தான் கெடு
கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டிக்டாக் நீதிமன்றத்தை நாட திட்டம்
அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக கூறப்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம், அமெரிக்கா டொனால்டு டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு டிக் டாக் ஒரு வருடமாக அமெரிக்காவின் கவலைகளுக்கு எதிராக நடவடிக்கையினை, எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எங்களுக்கு வேறு வழியில்லை
நாங்கள் சட்டத்தினை நிராகரிக்கவில்லை. அதோடு எங்கள் பயனர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக நாங்கள் நீதித்துறை மூலம், இந்த சவாலை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதோடு எங்களுக்கு வேறு வழியும் இல்லை என்றும் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மிரட்டல்
ஆக இப்படி எது எடுத்தாலும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கையினை எடுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்கா சீனாவுக்கு இடையேயான புகைச்சலை அதிகரிக்கும் விதமாக டிரம்பின் மிரட்டல் வந்துள்ளது. நிச்சயம் இது அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தமே ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இரண்டாவது கட்ட ஒப்பந்தம் ஏற்படுமா? அல்லது இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications