கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு சோதனையால் வந்த புது சிக்கல் ..!
சான் பிரான்சிஸ்கோ: உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் ஆண்களுக்கு அதிகச் சம்பளம், பெண்களுக்குக் குறைவான சம்பளம் என்ற பாலின பாகுபாடு உள்ளதாக அரசு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
இப்படி ஒரு சோதனை நடந்ததைச் சான் பிரான்சிஸ்கோ தொழிலாளர் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சோதனை நடந்ததாக உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவைப் பொருத்த வரை இருபாலின ஊழியர்களுக்குச் சரி சமமான சம்பளம் அளிக்க வேண்டும் என்பது அரசின் விதி. இது இப்போது அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வந்தாலும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பெண்களுக்குக் குறைவான சம்பளம்
கூகுள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பெண்களுக்குக் குறைவான சம்பளம் அளித்து வந்ததற்கான நிறைய ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்று சோதனையில் ஈடுபட்ட தொழிலாளர் துறை பிராந்திய இயக்குநர் ஜேனட் வைப்பர் தெரிவித்தார்.
பாலின பாகுபாடுகளை மறுக்கும் கூகுள்
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனத்தில் சம்பளம் வாங்குவதில் நிறைய மாற்றங்கள் செய்யும் என்று அதில் பாலின பாகுபாடு ஏதும் கிடையாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் எண்ணிக்கை
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 19 சதவீதம் மட்டுமே பெண் ஊழியர்கள் உள்ளதாகக் கூறுபடுகின்றது. கூகுள் நிறுவனத்தில் 70,000 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பெண்கள் பணிபுரிகின்றனர்.
சிக்கலில் கூகுள்
தொழிலாளர் துறை இது குறித்து ஜனவரி மாதம் எடுத்த நடவடிக்கைகளால் அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனங்களின் பணிகளைத் தொடர் முடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசுடனான பணிகள் சுமுகமாக நடக்க வேண்டுமானால் முறையான ஊழியர்களின் விவரங்களைச் சோதனைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கூகுள் நிறுவனம் அவை ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் அவை வெளியிடப்படாது என்று மருத்து வருகின்றது.
கூகுள் நிறுவனம் ஊழியர்களின் பாலின எண்ணிக்கையில் உள்ள பாகுபாட்டினை வெளியிட்டாலும் எவ்வளவு சம்பளம் என்பதை மட்டும் ரகசியமாகவோ வைத்து இருக்கும்.
ஆரக்கிள்
இதே போன்று ஆரக்கிள் நிறுவனத்திலும் ஒரு வருடத்திற்கு முன்பு சோதனை நடத்தி பாலின பாகுபாட்டில் பெண் ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் அளித்தது சிக்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications