இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான எச்1பி விசாவிற்கான ப்ரீமியம் சேவை, அமெரிக்க அரசு 5 மாத தற்காலிக நிறுத்திற்குப் பின் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
இந்திய ஐடி ஊழியர்களின் அளவிற்கு அதிகமான விசா விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்யவும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கவும் அமெரிக்க அரசு இச்சேவைக்குத் தற்காலிக தடையை விதித்தது.
எச்1பி விசா..
இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களது நிறுவனத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த உதவி செய்கிறது எச்1பி விசா. தொழில்நுட்ப நிறுவனங்களை இதனை அதிகளவில் பயன்படுத்து வருகின்றனர், குறிப்பாகக் கடந்த வருடம் சுமாக் 10,000க்கும் அதிகமான ஊழியர்களை எச்1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்பட்டது.
விண்ணப்பம் எண்ணிக்கை
இதனை டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்திய காரணத்தால் எச்1பி விசா பெறுவதற்கான ப்ரீமியம் சேவையை அமெரிக்க அரசு 6 மாத தற்காலிக தடையை விதித்தது.
இந்நிலையில், தற்போது 1 மாதம் முன்னதாகவே இச்சேவையின் மீதான தடையை நீக்கி மீண்டும் ப்ரீமியம் சேவையை அளிக்கத் துவங்கியுள்ளது.
2018க்கு மட்டும்..
தற்போது திறக்கப்பட்டுள்ள சேவையின் கீழ் 2018ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
65,000 விசா
ஒவ்வொரு வருடமும் 65,000 விசாக்களை மட்டுமே அமெரிக்க அரசு அளிக்கும் நிலையில், இந்த ப்ரீமியம் விசா மூலம் சுமார் 20,000 விண்ணப்பங்கள் குவிகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிப்போருக்கு 15 நாட்களுக்குள் விசா அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications