டெஸ்லா நிறுவனரான எலன் மஸ்க் ஆகஸ்ட் மாதம் டெஸ்லாவை பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்து இருந்த நிலையில் அந்த முடிவினை திரும்பப் பெறுவதாக சில வாரங்களில் கூறினார். அது மட்டும் இல்லாமல் இனி வருங்காலத்திலும் டெஸ்லா நிறுவனம் பிரைவேட் லிமிட்டட் நிறுவனமாக மாற்றப்படாமல் பப்ளிக் லிமிட்ட நிறுவனமாகவே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எலன் மஸ்க் முதலீட்டாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவினை எடுத்துள்ளார். இது ஒரு மோசடி. இவரை டெஸ்லா நிறுவனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் என்றால் என்ன?
தனியார் நிறுவனம் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குகள் எல்லாம் குறிப்பிட சிலரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும்.
பப்ளிக் லிமிட்டட் நிறுவனம் என்றால் என்ன?
பப்ளிக் லிமிட்டட் நிறுவனம் என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டுப் பலரிடம் பங்குகள் இருக்கும். நிறுவனத்தின் லாபத்தினைப் பொருத்து இவர்களுக்குப் பணம் பகிர்ந்தளிக்கப்படும்.
அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம்
அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம் முதலீட்டாலர்களை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார் என்று வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் முதலீட்டாளர்களின் மிரட்டலுக்கு அடிப்பனிந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
கவனம்
முதலீட்டாளர்களுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்ற பிறகு எலன் மஸ்கு தனது முடிவில் இருந்து மாறியுள்ளார். மேலும் தனியார் நிறுவனமாக மாற்றுவது வணிகத்தின் மீதான கவனத்தினைச் சிதறடிக்கும் என்று உணர்ந்ததாகவும் இனி மாடல் 3 உற்பத்தி மற்றும் லாபம் மீது மட்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications