உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா பிற நாடுகள் மீது வர்த்தக தடைகள், வரி விதித்து வரும் இதே வேளையில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான நிதி செலவின திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாமல் கடந்த 40 நாட்களாக ஷட்டவுன் எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்க வரலாற்றில் நீண்ட கால ஷட்டவுன் என்றால் அது இதுதான், எதற்காக இந்த ஷட்டவுன்..? அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் கான்டிராக்ட்-க்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரையில் பாதிக்கும்.

இப்படி இந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, டிரம்ப் அரசு சுதாகார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் எதிர்கட்சியான டெமாக்ரடிக் கட்சியினர் எதிர்த்தனர். இதனால் மொத்த செலவின மசோதாவும் ஒப்புதல் பெற முடியாமல் 40 நாள் அமெரிக்க அரசு ஷட்டவுன் எதிர்கொண்டது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செலவின மசோதா தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க செனட்டில் அதாவது நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 60-40 வாக்குகள் செலவின மசோதாவுக்கு சதகமாக விழுந்த காரணத்தால் 40 நாள் ஷட்டவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் செலவின மசோதாவில் பெரும் பகுதி நடைமுறைக்கு வந்து அரசு சேவைகளும், அமைப்புகளும் இயல்பு நிலைக்கு விரைவில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செலவின மசோதா ஒப்புதல் அளிக்க இது முதல்கட்ட வாக்கெடுப்பு பணிகளாகும்.
ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில் திடீர் திருப்பம் ஏற்பட முக்கியமாக இருந்தது டெமாக்ரடிக் கட்சியில் இருந்த சில நடுநிலை தலைவர்கள் தான். இந்த வாக்கெடுப்பு நடத்தும் முன் டிரம்ப் அரசு ஹெல்த்கேர் மானியம் திரும்ப கொண்டு வருவதில் இறுதி முடிவுகள் எடுக்காமல் டிரம்ப் அரசின் செலவின ஒப்பந்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 60 சதவீத வாக்குகள் டிரம்ப் அரசுக்கு சாதகமாக இருந்தது. இது வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி பல டெமாக்ரடிக் கட்சியினரை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் டிரம்ப் அரசின் பிற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் டெமாக்ரட் கட்சியினரின் முக்கிய தேவையாக கருதப்படும் ஹெல்த்கேர் மானியம் தொடர்வது குறித்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் நடத்த உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தான் சன்டே வாக்கெடுப்பின் டீல் பிரேக்கராக இருந்தது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஜனவரி 1ஆம் தேதி வரையில் தொடரும், இந்த டெட்லைன் முடியும் முன் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த செனடர் சபையில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு உள்ளதால் 60-40 அளவில் செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
டெமாக்ரட் கட்சியினர் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்கவில்லை. ஆனால் மூன்று முன்னாள் கவர்னர்கள், டெமாக்ரட் குழுவை உடைத்து ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். இது 6 வாரம் நீடித்த ஷட்டவுன் முடிவுக்கு கொண்டுவந்தது.
இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள கிடைக்கும். இதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிரம்ப் அரசு பணிநீக்கம் செய்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நிலுவை சம்பளம் அளிக்கப்படும் மசோதாவிற்கும் இதில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஹெல்த்கேர் மானியம் மூலம் அமெரிக்க மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதிகள் கிடைக்கிறது. இதை தொடர வேண்டும் என எதிர்கட்சியான டெமாக்ரடிக் வலியுறுத்தும் வேளையில் டிரம்ப் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மொத்த ஷட்டவுன் பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக இருந்து வருகிறது. இதற்காக டிசம்பர் மாத வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றால் மானியம் தொடரும்.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications