சீன நிறுவனங்களுக்கு பிரச்சனையை கொடுக்கும் சட்ட மசோதா.. அமெரிக்கா அதிரடி..!

உலகளவில் கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன், உலக நாடுகள் அனைத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டுள்ளது கொரோனா.

ஒவ்வொரு நாடுகளும் எப்படி கொரோனாவை தங்கள் நாட்டில் இருந்து துரத்துவது என பல அதிரடியான முயற்சிகளை செய்து வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய இந்த கொடிய கொரோனா என்னும் அரக்கன், இன்று அமெரிக்காவில் தான் அதிகளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது உயிர்பலியாக இருந்தாலும் சரி, பொருளாதாரமாக இருந்தாலும் சரி.

அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவில் பாதிப்பு

உலகளவில் 50,82,661 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 3,29,294 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் 15,91,991 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 94,994 ஆக அதிகரித்துள்ளது. இன்று உலகளவில் பாதிப்பும் சரி, பலி எண்ணிக்கையும் சரி அதிலும் அமெரிக்கா தான் முதலிடத்தினை பிடித்துள்ளது.

சீனாவுக்கு எச்சரிக்கை

சீனாவுக்கு எச்சரிக்கை

இது ஒரு புறம் இருந்தாலும், இதற்கு முக்கிய காரணம், சீனா தான் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதை நாம் காண முடிகிறது. இதனால் தொடர்ந்து சீனாவினை எச்சரிக்கும் விதமாகவே அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் சரி, மற்ற நிர்வாக அதிகாரிகளும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் அமெரிக்கா மக்கள் 40% சீனா பொருட்களே வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

சீனாவுக்கு எதிரான மசோதா

சீனாவுக்கு எதிரான மசோதா

இப்படி தொடர்ந்து சீனாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள அமெரிக்கா, தற்போது மிகப்பெரிய ஆப்பாக வைத்துள்ளது எனலாம், அது அமெரிக்க நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை சீனாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு கொண்டு வர உதவும் வகையில் ஒரு மசோதா ஒன்றினை அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டை ஈர்ப்பது அவசியம்

முதலீட்டை ஈர்ப்பது அவசியம்

அமெரிக்கா மட்டும் அல்ல பல்வேறு உலக நாடுகளும் தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களை தங்கள் நாட்டுக்கு அளிக்கும் விதமாக பிரிங் அமெரிக்கன் கம்பெனி ஹோம் ஹாக்ட் என்ற புதிய சட்ட மசோதா ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் அமெரிக்க பொருளாதாரத்தினை வலுவாக மாற்ற அமெரிக்கா அதிக முதலீட்டை ஈர்ப்பது அவசியம்.

சீனா அமெரிக்காவுக்குரிய நண்பன் அல்ல

சீனா அமெரிக்காவுக்குரிய நண்பன் அல்ல

பொருளாதாரம் மந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இதே அச்சம் உள்ளது. ஆனால் சீனா அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பன் அல்ல. இனியும் நாம் சீனாவை வர்த்தகத்திற்காக நம்பி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆக உள்நாட்டிலேயே முதலீட்டினை ஊக்குவிப்போம் என்பதையும் மசோதாவில் வலுயுறுத்தியுள்ளப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியல் இடுவதைத் தடுக்க சட்டம்

பங்கு சந்தையில் பட்டியல் இடுவதைத் தடுக்க சட்டம்

இது மட்டும் அல்ல பெருகி வரும் பதற்றங்களுக்கு இடையில், அமெரிக்க நிறுவனங்களான அலிபாபா குழுமம் மற்றும் பைடு இன்க் போன்ற சீன நிறுவனங்களுக்கு அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடுவதைத் தடுக்க வழிவகுக்கும் சட்டத்தினை புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இதனால் அதன் பங்குகள் அன்று பெருமளவில் சரிந்தது.

சீனா நிறுவனங்களுக்கு பாதிப்பு தான்

சீனா நிறுவனங்களுக்கு பாதிப்பு தான்

கடந்த வாரம் அமெரிக்கா ஜனாதிபதி பாக்ஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் தணிக்கை கணக்கினை சரிவர பின்தொடர்வதில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். ஆக எப்படி இருப்பினும் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வருவதை நாம் உணர முடிகிறது. இதனால் சீன நிறுவனங்கள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படும் என்பது உண்மையே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+