டெல்லி: நடப்பு ஆண்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஸ்மார்ட்போன் விற்பனையானது குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
குறிப்பாக நடப்பு ஆண்டிள் ஸ்மார்ட்போன் விற்பனையானது இரண்டாவது காலாண்டில் 20.4% குறைந்து, 295 மில்லியன் யூனிட்களாக குறைந்துள்ளதாக தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் துறைல் ஜாம்பவான் ஆக கொடிகட்டி பறந்து கொண்டு இருந்த, ஹூவாய் நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளது. இதே தென் கொரியாவின் சாம்சங் நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது.
டாப் லிஸ்டில் ஆப்பிள் நிறுவனம்
இதே சீனாவின் மற்ற பிராண்டுகளான ஒப்போ, ஜியோமி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் விற்பனையும் சரிந்துள்ளது. கார்ட்னர் அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனம் தான் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட வழக்கமான விற்பனை பதித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் விற்பனையானது சற்று பின்னடைவை சந்தித்து இருந்தாலும். மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது ஆப்பிள் மீண்டும் டால்; லிஸ்டில் உள்ளது.
எவ்வளவு விற்பனை?
ஆப்பிள் நிறுவனம் கடந்த காலாண்டில் 38 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை ஒப்பிடும்போது 0.4% குறைவாகும். இதே ஹூவாய் நிறுவனம் மற்றும் சாம்சங் நிறுவனம் மொத்தம் 55 மில்லியன் யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளன. இது முறையே 27.1% மற்றும் 6.8% வீழ்ச்சி கண்டுள்ளது.
விற்பனை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
ஜியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் இதற்கு அடுத்தாற்போல விற்பனை முறையே 26 மற்றும் 23 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்தது. சீனாவின் மேம்பட்ட நிலைமை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது தேவை அதிகரித்துள்ளதாக கார்ட்னர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். எனினும் போக்குவரத்து தடை மற்றும் சில்லறை கடைகள் மூடல் மற்றும் செலவினங்கள் குறைப்பு காரணமாக இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை குறைந்துள்ளதாக கார்ட்னர் ஆய்வு தெரிவித்துள்ளது.
சரிவில் ஸ்மார்ட்போன் சந்தை
ஸ்மார்ட்போன் விற்பனையானது உலகளாவிய சரிவினை கண்டுள்ளது. குறிப்பாக உலகின் இரு பெரும் ஸ்மார்ட்போன் சந்தையின் சரிவு, ஒட்டுமொத்த சரிவில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த காலாண்டில் விற்பனை சீனாவில் 7% சரிவினையும், இதே இந்தியாவில் 46% சரிவினையும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் மற்ற சீனா நிறுவனங்களை விட, ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையை வழக்கம்போல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications