பாவம் அமெரிக்கா... அவர்களுக்கே இந்த கதி என்றால் இந்தியாவுக்கு?

உலகம் முழுக்க, தன் ஆதிக்கத்தை ராணுவம் வழியாகவோ அல்லது பண பலம் வழியாகவோ பரப்பிக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. ஆனால் கொரோனா வைரஸ் அங்கு தான் கூடாரம் போட்டு வெளுத்துக் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில், ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் (hydrochloroquine) என்கிற ஒற்றை மருந்துக்கு, தன் நட்பு நாடான இந்தியாவையே மிரட்டி வாங்கும் அளவுக்கு வந்திருக்கிறது என்றால், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் எப்படி ஆட்டிப் படைக்கிறது எனப் புரியும்.

இப்போது இன்னொரு பிரச்சனை, அமெரிக்காவின் பணக்கார மாகாணத்தில் உதித்து இருக்கிறது.

unemployment benefits

unemployment benefits

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில், ஒரு நபர் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை இழந்தால், அவருக்கு அரசு சில பண உதவிகளைச் செய்யும். அந்த உதவிகளின் பெயர் தான் Unemployment Benefit. இப்போது அமெரிக்காவில் அந்த சலுகையை நம்பித் தான் லட்சக் கணக்கான பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா

அமெரிக்க மாகாணங்களிலேயே மிகவும் செல்வச் செழிப்பான மாகாணங்களில், சிலிக்கான் வேலி எனப்படும் கலிஃபோர்னியாவும் ஒன்று. ஆப்பிள், டிஸ்னி, கூகுள் போன்ற உலகின் பணக்கார கார்ப்பரேட் கம்பெனிகள் எல்லாம் கலிஃபோர்னியாவில் தான் இருக்கின்றன. அப்படி என்றால் வரி வருமானம் எல்லாம் எப்படி இருக்கும் எனப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பணக்கார மாகாணத்துக்கு இப்போது ஒரு சோதனை வருகிறதாம்.

வேலை இழப்பு

வேலை இழப்பு

கொரோனா வைரஸால், சிலிகான் வேலியில், தொடர்ந்து பல தரப்பட்ட மக்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல, வேலை இழந்தவர்களுக்கு, Unemployment Benefit பணச் சலுகைகளைக் கொடுக்க வேண்டி இருக்குமே. அதையும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் விரைவில் பணம் தீரப் போவதாக san francisco chronicle பத்திரிகைச் செய்திகள் சொல்லி இருக்கிறது.

பணம் காலி

பணம் காலி

அடுத்த சில வாரங்களில், கலிஃபோர்னியா மாகாணத்தில் வேலை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் இன்சூரன்ஸ் ஃபண்டில் பணம் தீரப் போகிறதாம். கலிஃபோர்னியா உடன் நியூ யார்க் மற்றும் ஒஹியோ மாகாணங்களின் பணமும் சர சரவென தீர்ந்து கொண்டு இருக்கிறதாம். கலிஃபோர்னியா மாகாணத்தில் Unemployment insurance fund தீருவது எல்லாம் அட்சய பாத்திரம் தீருவதற்கு சமம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

மத்திய அரசு உதவி

மத்திய அரசு உதவி

கலிஃபோர்னியா மாகாணத்தின் பணம் தீர்ந்துவிட்டால், மத்திய அரசிடம் இருந்து கடன் வாங்கி, Unemployment Benefit கொடுக்கத் தொடங்குவார்கள். இப்போது இருக்கும் நிலையில், ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ, கலிஃபோர்னியா மாகாணம் மத்திய அரசிடம் கடன் வாங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம். இதை Employment Development Department-ஐச் சேர்ந்த பேச்சாளர் Loree Levy உறுதி செய்து இருக்கிறார். எனவே வேலை இழந்தவர்களுக்கு வழக்கம் போல பணம் கொடுக்கப்படுமாம். ஆனால் ஒரு சிக்கல்.

வரிச் சுமை

வரிச் சுமை

அமெரிக்க காங்கிரஸ் ஏதாவது உதவித் தொகை கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் கடன் வாங்கித் தான் சமாளிக்க வேண்டும் என்றால், கலிஃபோர்னியா மாகாணம், தன் கடனை அடைக்க, கூடுதலாக வரி வசூலிக்கத் தொடங்கும். குறிப்பாக unemployment insurance taxes-ஐ உயர்த்திவிடும். அப்போது தான் அடுத்த சில பல ஆண்டுகளில் மத்திய அரசிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியுமாம்.

வேலை பிரச்சனை

வேலை பிரச்சனை

கூடுதலாக unemployment insurance taxes-ஐ வசூலிப்பது, நேரடியாக, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கம்பெனிகளை யோசிக்க வைக்கும். எனவே கொரோனா வைரஸ் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த பின், வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்கிறார் மாநில வரிக் கொள்கை இயக்குநர் ஜரத் வால்சக் (Jared Walczak).

மற்ற மாகாணங்கள்

மற்ற மாகாணங்கள்

கலிஃபோர்னியாவில் இந்த கதை என்றால், ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் கடந்த மார்ச் 2020-க்கான Unemployment Benefit பணத்தை சுமார் 71 சதவிகிதம் பேர் இன்னும் பெறவில்லை என Vox பத்திரிகை தன் வலைதளச் செய்திகளில் சொல்லி இருக்கிறது. இப்படி அமெரிக்காவே பல சிக்கல்களில் தவித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தியா

இந்தியா

அமெரிக்கா போன்ற சர்வ வல்லமை பொருந்திய, பண பலம் மிக்க நாட்டிலேயே கொரோனாவால் இத்தனை பிரச்சனைகள் எழுகிறது என்றால், இந்தியா போன்ற அதிக பண பலம் இல்லாத, அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா வைரஸ் என்ன மாதிரியான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+