வாஷிங்டன்: கொரோனா என்னும் கொடிய நோயின் கலவரத்தால் ஏற்கனவே தடுமாறியுள்ள அமெரிக்காவுக்கு, மேற்கொண்டு தற்போது அடுத்தடுத்தடுத்த பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு பிரச்சனையும் வந்து கொண்டு இருக்கிறது.
அதிலும் இன்றைய நிலவரப்படி, 18 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 1 லட்சத்தினை தாண்டிள்ளது.
மேலும் லாக்டவுன் காரணமாக தொழிற்சாலைகள் முடக்கம், நிறுவனங்கள், தொழில்கள், வேலையிழப்பு, பொருளாதார சரிவு, தற்போது இந்த லிஸ்டில் உள்நாட்டு பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது.
தலைதூக்கும் பிரச்சனை
இதன் காரணமாக அமெரிக்கா தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது எனலாம். அமெரிக்காவில் கருப்பினத்தவரின் கழுத்தை நெரித்து கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக அமெரிக்காவின் சில நகரங்களில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
லாக்டவுன் பலப்படுத்துதல்
இதற்கிடையில் போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பகிறது. அதோடு இந்த போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து மக்களை கலவர பூமியில் இருந்து அகற்றியதோடு, வன்முறை சம்பவங்கள் நடந்த சுமார் 40 நகரங்களில் முழு லாக்டவுன் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அதிகரிக்கும் போராட்டம்
எனினும் லாக்டவுன் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூட, அதனையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அமெரிக்காவின் 10க்கும் மேற்பட்ட மாகாணங்களிலும், வாஷிங்டனிலும் 5 ஆயிரம் தேசிய போலீஸ் படையினரும், உள்நாட்டு அவசர நிலைகளுக்கான ராணுவ படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
60 வருடங்களுக்கு பிறகு மோசமான நிலை
எனினும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பாக மீண்டும் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு எறிந்ததால் பரபரப்பு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த 1960 பிறகு இது போன்ற ஒரு நிலையை அமெரிக்காவில் கண்டதில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டுபாடு
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வன்முறையை நிறுத்தாவிட்டால், ராணுவத்தை பயன்படுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் ராணுவத்தினை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் செய்திகள் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரிவில் பங்கு சந்தைகள்
இது குறித்து டிரம்ப் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின மனிதனுக்கு நீதி வழங்கப்படும். அது ஒரு ஜனாதிபதியாக எனது முதல் மற்றும் மிக உயர்ந்த கடமை. அமெரிக்காவின் சட்டங்களை நிலைநிறுத்துவதாக நான் சத்தியம் செய்து உள்ளேன். அதைத்தான் நான் செய்வேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் வன்முறை குறையாவிட்டால், தான் அமெரிக்கா ராணுவத்தினை பயன்படுத்தி பிரச்சனையை தீர்ப்பதாக கூறியதை அடுத்து பங்கு சந்தைகக் சரிவில் காணப்படுகின்றன.
பலத்த வீழ்ச்சி
குறிப்பாக S&P 500 0.38% வீழ்ச்சி கண்டுள்ளதாக, ஜப்பானின் NiNikkei 225 0.34%, ஆஸ்திரேலியன் பங்கு சந்தையான S&P/ASX 200 0.15% அதிகரித்தும் உள்ளது. இதே இதற்கு முந்தைய சந்தை அமர்வில் அமெரிக்க பங்கு சந்தை 0.5% மூடப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் இல்லாத அளவு லாபத்துடன் உயரத்தினை தொட்ட நிலையில், இந்த வீழ்ச்சி கண்டு வருகிறது.
பிரச்சனைகள் இருக்காது
ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், இந்த உள் நாட்டு கலவரம் மேற்கொண்டு இன்னும் எப்படி விளைவுகளை அதிகரிக்க போகிறது என்று தெரியவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. எனினும், சிகாகோவில் உள்ள கிங்ஸ் வியூ மேனேஜ்மென்ட் அசெட் சிகாகோ, இந்த போராட்டம் கொரோனா வைரஸினை விட ஒன்றும் மோசமானது அல்லது. இது பொருளாதாரத்தினை அழிக்க போவதில்லை. இதனால் பொருளாதாரத்திற்கு பெரிய விளைவுகள் ஏற்பட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications