ஈரான் ராணுவம் ஹார்முஸில் 3 சரக்கு கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கியதை தொடர்ந்து, 2 நாட்களாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது, செவ்வாய்க்கிழமை தாக்குதலை காட்டிலும் புதன்கிழமை தாக்குதல் மிகவும் பயங்கரமாகவும், பெரியதாகவும் இருந்தது என ஈரான் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
டிரம்ப் கூறியது போல் ஈரான் ஒரு முறை தாக்கினால் 8 மடங்கு அதிக தாக்குதலை எதிர்கொள்ளும் என நேற்று துருக்கியில் NATO மாநாட்டில் பேசியதை தொடர்ந்து 2வது நாள் தாக்குதல் நேற்று இரவு நடந்தது.

அமெரிக்க ராணுவம் சுமார் 90 இடங்களில் நேற்று தாக்குதலை நடத்தியுள்ளது, நேற்றைய தாக்குதல் அனைத்தும் ஈரானின் வர்த்தகத்தையும், ஹார்முஸ்-ல் சுதந்திரமாக பயணிக்கும் ஈரானின் வாய்ப்புகளையும், திறன்களையும் மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற டிரம்ப்-ன் உத்தரவாதம் அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக துறைமுகங்கள், துறைமுக கட்டமைப்புகள், துறைமுகத்தின் அருகில் இருக்கும் ஏர் டிபென்ஸ் சிஸ்டம்ஸ், சர்வைலென்ஸ் அமைப்புகள், ஏவுகணை தளங்கள், டிரோன் தளங்கள், துறைமுக கட்டமைப்புகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் முக்கியமாக பந்தர் அப்பாஸ், புஷேர், சபஹர், கொனாரக், ஈரான்ஷாஹர், சிரிக், ஜாஸ்க், அபு மூசா தீவு, கேஷ்ம் தீவு மற்றும் அக்காலா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சபஹார் துறைமுகம் மீதான தாக்குதல்.
ஏப்ரல் மாதம் அமெரிக்கா - ஈரான் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு நேற்று தான் முதல் முறையாக இங்கு தாக்குதல் நடந்துள்ளது. இதில் இத்துறைமுகத்தில் இருந்த 2 ஷிப் முனையங்கள், கப்பலின் டிராபிக் கன்ட்ரோல் டவர், டிப்போ என பல முக்கியமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதல் மூலம் இப்பகுதியில் இருந்த இமாம் அலி மருத்துவமனையும் சேதம் அடைந்தது, இதோடு மொத்த சபஹார் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சபஹார் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சபஹார் துறைமுகம் ஏன் மிகவும் முக்கியம், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் மற்ற வளைகுடா நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய சபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இதன் காரணமாக இந்திய அரசு பெரும் முதலீட்டில் Shahid Beheshti Terminal-ஐ மொத்தமாக கையில் எடுத்து கட்டி மேம்படுத்தி வருகிறது, இதற்காக 2024ல் India Ports Global Limited (IPGL) நிறுவனம் ஈரான் அரசுடன் 10 வருட ஒப்பந்தம் செய்தது.
இத்துறைமுகத்திற்காக கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது இந்தியா, இது மட்டுமா சபஹார் துறைமுகத்திற்கும் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் Zahedan பகுதிக்கும் மத்தியிலான 700 கிலோமீட்டர் ரயில் வழித்தடத்தையும் இந்தியா அமைத்து வருகிறது.
இந்த இணைப்பு மூலம் பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு புதிய வர்த்தக வழிப்பிறக்கும் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இத்தகைய முக்கியமான துறைமுகத்தில் தான் அமெரிக்க படை நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications