இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது, இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவிலிருந்து ஒரு நாளுக்கு 20-22 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, இது கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்ச அளவை எட்டியுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் குவைத் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த மொத்த கச்சா எண்ணெய் அளவை காட்டிலும் அதிகம் என என Kpler தரவுகள் காட்டுகின்றன.

ஜூன் 13-ல் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்களை தாக்கியதையடுத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மூன்று ஈரானிய தளங்களை தாக்கி அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் - ஈரான் போரில் நேரடியாக இணைந்ததுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பி-2 போர் விமானத்தை கொண்டு தாக்கி ஈரான் எல்லையை விட்டு பாதுக்காப்பாக வெளியேறியதாக அறிவித்தார். மேலும் ஈரான் சமாதான பேச்சுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த இருமுனை மோதலாக இருந்து மும்முனை போராக மாறியுள்ளது. இந்த போர் மூலம் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், ஈரான் அடுத்த எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்பதை உலகமே உற்று நோக்கியிருக்கும் இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இதன் விலை எந்த அளவுக்கு உயரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே 13% உயர்த்தியது. இதனால், இந்திய அரசு மத்திய கிழக்கு எண்ணெய்-களை விடுத்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய உரல்ஸ் கச்சா எண்ணெயை அதிகம் வாங்க துவங்கியுள்ளது.
மே மாதத்தில் ஒரு நாளுக்கு 19.6 லட்சம் பேரலாக ஆக இருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, ஜூன் மாத்தில் 20-22 லட்சமாக உயர்ந்ததுள்ளது. இதனால் மத்திய கிழக்கு இறக்குமதி 20 லட்சம் பேரலாக குறைந்தது. ஜூன் மாதத்தில் இந்திய சவுதி அரேபியா-வில் இருந்து 6,15,000 பேரல், ஈராக்-ல் இருந்து 12 லட்சம் பேரல், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 4,90,000 பேரல் எண்ணெய்யை சப்ளை செய்துள்ளது.
இதேவேளையில் டிரம்ப்-ன் வரி விதிப்பில் இருந்து தப்பிக்கவும், இந்தியா - அமெரிக்கா மத்தியில் சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற முக்கிய இலக்குடன், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி 2,80,000 பேரலிருந்து 4,39,000 பேரலாக உயர்ந்தியது. இந்தியாவின் பல்வகைப்படுத்தல் முயற்சிகள் தற்போது பல வகையில் பலன் அளித்துள்ளது.
இந்தியா, ஜூன் மாதத்தில் ஒரு நாளுக்கு 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இதில் ரஷ்ய எண்ணெயின் பங்கு மட்டும் 38%, பொருளாதார பயன்கள், போர் அச்சம் காரணமாக ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது தற்போது பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. ஈரான் நாட்டில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சப்ளை தடை பெறுவதற்கு முன்பு ஆங்கோலா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா அரசு ஆலோசித்து வருகிறது.
இதன் மூலம் போரினால் ஏற்படும் விலை உயர்வை இந்தியா ஒரு அளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவுக்கு ரஷ்ய எண்ணெய் பெரிய அளவில் பலன் அளிக்கிறது.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications