ஈரான் - அமெரிக்கா மத்தியில் போர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அமெரிக்க ராணுவம் இன்று கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது அமெரிக்காவின் முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இன்று அமெரிக்கா ராணுவம் தென்மேற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள டார்கோவின் அணுமின் நிலையத்தின் கட்டுமான இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதுக்குறித்து ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பு கூறுகையில் புதிய அணுமின் நிலையத்தின் கட்டுமான இடத்தை பல ஏவுகணைகள் தாக்கியது.

அமெரிக்காவின் இந்த செயல்பாடு சர்வதேச விதிகளை மீறும் விஷயமாகும் என தஸ்னிம் செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த அணுமின் நிலைத்தை Esteghlal power plant என்றும் அழைக்கப்படுகிறது, இது 300 மெகாவாட் வாட்டர் ரியாக்டராகும். இது ஈரான் நாட்டின் ஒரேயொரு கமர்சியல் அணுமின் நிலையமாகும், இதை முழுக்க முழுக்க ஈரானில் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு வருகிறது.
இந்த அணுமின் நிலையம் திட்டமிட்டப்படி கட்டப்பட்டால் 2030க்குள் செயல்பாட்டுக்கு வரும் என திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சிதைக்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது, இதுவரையில் விமான நிலையம், ரயில் நிலையம், பாலம், துறைமுகம், மின்கட்டமைப்பு, தண்ணீர் சேமிப்பு கட்டுமானம், ராணுவ கட்டமைப்புகளை தாக்கி வந்த அமெரிக்கா தற்போது அணுமின் நிலையத்தின் மீது தாக்கியுள்ளது.
முந்தைய தாக்குதலில் அமெரிக்கா ஈரான் நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் புஷேர் அணுமின் நிலையம் (Bushehr Nuclear Power Plant) அருகில் தாக்கியது, இப்போது எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது.
தற்போது அடுத்தக்கட்டமாக கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் மீது தாக்கியுள்ளது. ஈரான் படைகள் டிரம்ப்-ஐ கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானதில் இருந்து டிரம்ப் தாக்குதல் நடத்தி வருகிறார்.
மேலும் ஈரானில் தாக்குதல் நிறுத்த எவ்விதமான திட்டமும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இல்லாமல் இந்த தாக்குதல் நடத்து வருகிறது. இதேவேளையில் ஹார்முஸ்-ல் மீண்டும் போக்குவரத்து முடங்கி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications