சீனாவுக்கு இது சரியான அடி தான்.. பல்லாயிரம் ஆப்களை நீக்கிய ஆப்பிள்.. உண்மையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கு இது போறாத காலமே. சுற்றி சுற்றி பல தரப்பிலும் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. எனினும் இடையில் சற்று சமாதானம் ஆன நிலையில், தற்போது மீண்டும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது.

 

ஒரு புறம் இது தான் பிரச்சனை எனில், தற்போது இந்தியா சீனா எல்லை பிரச்சனை, இங்கிலாந்து ஹூவாய்க்கு எதிரான போர்க்கொடி, ஆஸ்திரேலியா, ஜப்பான் இப்படி பல நாடுகளும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதிலும் இந்தியா தரப்பில் சொல்லவே தேவையில், அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்தாலும், மற்ற நாடுகளின் கிடுக்குப்பிடியில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை

இந்த நிலையில் பல நாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற ஆயத்தமாகி வருகின்றன. இது தான் இப்படி எனில், மற்ற நாடுகளில் உள்ள சீன நிறுவனங்களால், அந்தந்த நாடுகளில் தரவுகள், தொழில் நுட்பங்கள் களவாடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் சீனாவுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

சீன ஆப்கள் நீக்கம்

சீன ஆப்கள் நீக்கம்

அமெரிக்காவின் டெக் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனம், சீன ஆப் ஸ்டோரிலிருந்து சனிக்கிழமையன்று 29,800 ஆப்களை நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் 26,000க்கும் மேற்பட்ட கேம்களும் அடங்கும் என்று ஆராய்ச்சி நிறுவனமான கிமாய் (Qimai) தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

இந்த அதிரடியான நடவடிக்கையானது சரியான உரிமம் பெறப்படாத நிலையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து ஆப்பிள் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே ஆப்பிள் கேம் வெளியீட்டாளர்களுக்கு ஜூன் மாதம் காலக்கெடுவாக வழங்கியது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிம எண்ணை பயன்படுத்த கூறியது. இது பயனர்கள் பயன்பாட்டின் போது கொள்முதல் செய்யவும் உதவுகிறது.

ஆப்பிள் நடவடிக்கை

ஆப்பிள் நடவடிக்கை

சீனாவின் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் நீண்ட கால இந்த விதிமுறைகளுடன் இருந்த நிலையில், தற்போது அதனை கண்டிப்பாக ஆப்பிள் ஏன் செயல்படுத்துகிறது என்பது தான் தெளிவாக புரிய வில்லை என்றும் கூறப்படுகிறது. இதே இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் 2,500க்கும் மேற்பட்ட தலைப்புகளை அதன் ஆப்பிலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு இது பாதிப்பு தான்

சீனாவுக்கு இது பாதிப்பு தான்

இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டெவலப்பர்களின் வருமானத்தினை மிகவும் பாதிக்கிறது. வணிக உரிமத்தினை பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, இது சீனாவில் உள்ள iOS விளையாட்டுத் துறையினருக்கும் இது பேரழிவை ஏற்படுத்துகிறது என்று AppIn Chinaவின் மேலாளார் டோட் குன் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
உண்மையில் சீனாவுக்கு இது போறாத காலமே...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US tech giant apple removes thousands of games and apps from china store

According to the Qimai report apple removed 29,800 apps from china store, including more than 26,000 games.
Story first published: Sunday, August 2, 2020, 19:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X