அமெரிக்காவின் சிலிக்கான் வேலியாக இருக்கும் சான் ஃபிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட AI கோடிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான கர்சர் (Cursor) அலுவலகத்தின் புதிய கொள்கை தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
பொதுவாக அமெரிக்காவில் ஷூ, செருப்புகளை வீட்டில் அணிவது இயல்பு, ஆனால் Cursor போன்ற பல நிறுவனங்கள் தற்போது அலுவலகத்தில் ஷூ, செருப்பு இல்லாமல் பணியாற்றுவது முக்கிய கொள்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் நிறுவனங்களில் இது ஆர்வமாக பின்பற்றப்படுகிறது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த டெவலப்பர் ஆண்ட்ரே லான்ட்கிராஃப் (Andre Landgraf) தனது X கணக்கில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அலுவலகத்திற்கு முன் பலரின் காலணிகள் கழற்றி வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக "சான் ஃபிரான்சிஸ்கோவில் இருப்பவர்களுக்கு இது எந்த ஆபீஸ் என்று கட்டாயம் தெரியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த பிற டெக் ஊழியர்கள் உடனடியாக "கர்சர் ஆபீஸ்", "கண்டிப்பாக கர்சர்தான்", "CURSOR" என்று கமென்ட் செய்து அடையாளம் காட்டியுள்ளனர்.
கர்சர் நிறுவனம் 2022இல் மைக்கேல் ட்ரூல், அமன் சாங்கர், சுவாலே அசிஃப், ஆர்விந்த் லூன்மார்க் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதில் அமன் சாங்கர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் MIT பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.

இந்நிறுவனம் AI உதவியுடன் கோடிங் செய்யும் ஸ்மார்ட் கோட் எடிட்டரை உருவாக்கியது. சாப்ட்வேர் டெவலப்பர்கள் கோட் எழுதுவது, திருத்துவது, புரிந்துகொள்வது ஆகியவற்றை வேகமாகச் செய்ய உதவுகிறது இந்த கர்சர் டூல். நவம்பர் 2025இல் 2.3 பில்லியன் டாலர் நிதியை திரட்டிய இந்நிறுவனம் 29.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் வளர்ந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தனித்துவமான கொள்கை என்னவென்றால், அலுவலகத்தில் காலணி அணியக்கூடாது. ஊழியர்கள் அனைவரும் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்கின்றனர். இது சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள பல டெக் ஸ்டார்ட்அப்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கர்சர் ஊழியர் பென் லாங் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற புகைப்படத்தை பகிர்ந்தபோது, 25க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் இதே கொள்கையை பின்பற்றுவதாக பட்டியல் வெளியிட்டார். இந்த கொள்கை அலுவலகத்தை சுத்தமாக வைத்திருக்கவும், ஊழியர்களுக்கு வசதியாகவும் இருக்கும் என நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆண்ட்ரே லான்ட்கிராஃப் X பதிவில் சிலர் தெய்வீக அனுபவம் என்ற கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் இது போன்ற கொள்கைகளை விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் டெக் உலகின் வித்தியாசமான ஆபீஸ் கலாச்சாரத்தை விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications