அமெரிக்காவில் பிரீமியம் எச்-1பி விசாக்களுக்கு 6 மாதம் இடைக்காலத் தடை..!
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு வழக்கமான எச்-1பி விசா விண்ணப்பங்கள் அதிகம் தேக்கம் அடைந்துள்ளதால் ஆறு மாதத்திற்கு சில நிறுவனங்கள் வேகமாக விசாக்கள் பெற முயலும் பிரீமியம் விசா விண்ணப்பங்களுக்கு 6 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எச்-1பி விசா வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கவில்லை என்றும், பிரீமியம் முறையை மட்டுமே தடை விதித்திருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரீமியம் விசா கட்டணம்
இந்த பிரீமியம் விசாக்களை பெற நிறுவனங்கள் 1,125 டாலர்கள் வரை கூடுதல் கட்டனம் செலுத்தும் போது வழக்கமான எச்-1பி விசா வழங்குவதை விட வேகமாக செயல்படுத்த கூடிய முறை ஆகும். இப்படி கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர் எச்-1பி விசா பெற பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று விடும்.
வழக்கமான எச்-1பி விசா
இந்த இடைக்கால தடையின் மூலம் வழக்கமான எச்-1பி விசா வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு தெரிவித்துள்ளது.
வழக்கமான எச்-1பி விசாவிற்கும் பிரீமியம் கட்டணம் பெறுவதற்கும் என்ன வித்யாசம்..?
வழக்கமாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது விசா பெறுவதற்கு 3 மாதம் கால அவகாசம் எடுக்கும். ஆனால் பிரீமியம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 15 நாட்களில் விசா பெற முடியும்.
தடை எப்போது முதல்
பிரீமியம் எச்-1பி விசா பெறுவதற்கான தடை வரும் ஏப்ரல் மாதம் 3 தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்-1பி விசா
எச்-1பி விசா என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து பணிப் புரிவதற்காக வழங்கப்படும் விசா ஆகும். இதற்கு சிறப்பு தகுதிகள் தேவை. இந்திய டெக் நிறுவனங்கள் அதிக அளவில் இந்த எச்-1பி விசாவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications