அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் டீசல் வேண்டும் என்பதற்காக 5 வருடங்களாக ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டி வந்த அமெரிக்க அரசு, தற்போது மொத்தமாக பின்வாங்க உள்ளதாக அந்நாட்டை மிரட்டி வருகிறது.
அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்ட காரணத்தால், டிரம்ப் இரு நாடுகள் மத்தியிலான எரிபொருள், எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். செப்டம்பர் மாதமும் இதேபோன்ற ஒரு உத்தரவை வெளியிட்ட பின்பும் உக்ரைன் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உக்ரைனின் தாக்குதல் மொத்தமாக முடக்கினால் மட்டுமே ரஷ்யாவில் இருந்து டீசல் வரும் என்பதால் டிரம்ப், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து உக்ரைனுக்கு இதுவரையில் கிடைத்து வந்த ஆயுதக் கொள்முதல் திட்டத்தை ஒட்டுமொத்தமாக முடக்கிவிடுவோம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் வெள்ளிகிழமை டிரம்ப் - புடின் மத்தியிலான ஆலோசனை கூட்டம் நடக்கிறது, சனிக்கிழமை ரஷ்யா டீசல் அளிக்க ஒப்புதல் அளித்து டீசல் ஏற்றுமதி மீதான தடையை தளர்த்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அமெரிக்க அதிகாரிகள், உக்ரைனுக்கான உளவுத் தகவல் பகிர்வு மற்றும் PURL எனப்படும் Prioritised Ukraine Requirements List அதாவது ஆயுதத் கொள்முதல் திட்டம் ஆகிய இரண்டையும் முழுமையாக நிறுத்திவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் தலைமையிலான அரசு டீசலுக்காக உக்ரைன் மீதான தனது நிலைப்பாட்டை மொத்தமாக நிறுத்தியுள்ளது. உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதேவேளையில் டிரம்ப் Energy Ceasefire அறிவித்த சில மணி நேரங்களில் பின்பு உக்ரைன் நாட்டில் கார்கிவ் (Kharkiv) என்னும் பகுதியில் இருக்கும் மிக முக்கியமான அனல் மின் நிலையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ல் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
