ரஷ்ய பணக்காரர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் அடுத்தடுத்து ரஷ்யப் பணக்காரர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்க ரஷ்ய அரசின் முதலீட்டுச் சந்தையில் இருக்கும் பணத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் அரசுடனும், புதினுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் சக்திவாய்ந்தவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளது.

ரஷ்யா உடனான உலக நாடுகளின் நட்புறவைத் தொடர்ந்து குறைக்க அமெரிக்கா மற்றும் பிற NATO அமைப்பு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைக் கைப்பற்றும் முக்கியமான திட்டத்தில் இறங்கியுள்ளது.

உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்!உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்!

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு ரஷ்ய பணக்காரர்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆரம்பம் முதல் அதிரடியாகச் செயல்படத் துவங்கியுள்ள அமெரிக்கா மிகப்பெரிய பரிசு தொகை கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

5 மில்லியன் டாலர் பரிசு

5 மில்லியன் டாலர் பரிசு

அமெரிக்காவின் கருவூல துறை Kleptocracy Asset Recovery Rewards என்ற திட்டத்தின் கீழ் ரஷ்ய பணக்காரர்களுக்குச் சொந்தமான படகு, மேன்ஷன், பிரைவேட் ஜெட், இதர சொத்துக்கள் குறித்து விபரத்தை அளித்தால் 5 மில்லியன் டாலர் வரையில் பரிசு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்தள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்
 

அமெரிக்க நாடாளுமன்றம்

கடந்த ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிற நாட்டு அரசு அல்லது அரசு அதிகாரிகள் முறையற்ற வகையில் முதலீடு செய்து, ஊழல் செய்து கைப்பற்றிய அமெரிக்கச் சொத்துக்களைக் கைப்பற்றும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஒருப்பகுதியாகத் தற்போது ரஷ்யாவை குறிவைத்து இத்திட்டத்தை நகர்த்தியுள்ளது அமெரிக்கா.

பிரேசில், சிங்கப்பூர்

பிரேசில், சிங்கப்பூர்

அமெரிக்கக் கருவூல துறை தற்போது ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைக் குறிவைத்து இயங்கினாலும் பிரேசிலிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் Odebrecht மற்றும் Braskem, 1MDB எனப்படும் மலேசியாவின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் ஊழல் செய்து கைப்பற்றியுள்ள அமெரிக்கச் சொத்துக்களையும் கைப்பற்றுவதில் குறியாக உள்ளது.

ரஷ்ய பணக்காரர்கள்

ரஷ்ய பணக்காரர்கள்

ரஷ்ய பணக்காரர்களின் ஆடம்பர கப்பல், ஆடம்பர வீடு, பிரைவேட் ஜெட்களை இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டின் அரசு ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் முடிவில் ரஷ்ய பணக்காரர்களுக்குப் பெறும் பாதிப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Treasury pay rewards of up to $5 million for info of Russian oligarchs assets

US Treasury pay rewards of up to $5 million for info of Russian oligarchs assets ரஷ்ய பணக்காரர்களின் சொத்து பற்றித் துப்புக் கொடுத்தால் 5 மில்லியன் பரிசு.. அமெரிக்கா அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X