அமெரிக்கா மத்திய கிழக்கில் பெரும் போர்கப்பல், போர் விமான படையை குவித்து வருகிறது. இரு நாடுகள் மத்தியிலான அணுசக்தி பேச்சுவார்த்தை துவங்கியிருக்கும் வேளையில், அமெரிக்கா, ஈரான் மீது நீண்டகால ராணுவ தாக்குதலை நடத்த தயாராகும் வகையில் இதை செய்து வருகிறது என AFP செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப், 2018இல் தான் ரத்து செய்த அணு ஒப்பந்தத்திற்கு மாற்றாக புதிய தீர்வு காணப்பட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறார். இதற்கு ஏற்றார் போல் அமெரிக்கா தனது போர்கப்பல், போர் விமானங்ளை மத்திய கிழக்கில் நிறுத்தி வருகிறது.

மத்திய கிழக்கில் தற்போது அமெரிக்காவின் 13 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஒரு விமானம் தாங்கி கப்பல் (USS Abraham Lincoln), ஒன்பது டெஸ்ட்ராயர் கப்பல்கள் மற்றும் மூன்று லிட்டோரல் காம்பாட் கப்பல்கள் ஆகியவை அடங்கும். கூடுதலான கப்பல்களும் தற்போது ஈரான் கடல் பரப்புக்கு வரவுள்ளன.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford கரீபியனில் இருந்து மத்திய கிழக்குக்கு தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதனுடன் மூன்று டெஸ்ட்ராயர் கப்பல்களும் உள்ளன. மத்திய கிழக்கில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் ஒரே நேரத்தில் இருப்பது மிகவும் அரிதானது என பாதுகாப்பு துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான 12 நாள் தாக்குதலின் போது இதுபோன்ற நிலை இருந்தது.
இதனால் தற்போதைய செயல்பாடுகளை பார்க்கும் போது அமெரிக்கா ஈரான் மீது பெரும் தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த முறை விளைகுடா நாடுகள் மிரட்டல் விடுத்தாலும் அமெரிக்கா பின்வாங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், அமெரிக்காவின் ராணுவ குவிப்பு ஈரானுக்கு எதிரான பெரும் நடவடிக்கைக்கு அடித்தளமாக இருக்கலாம். டிரம்பின் அச்சுறுத்தல்கள் சர்வதேச சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துக்களுக்கு இது சாதகமாக இருக்கும். முதலீட்டாளர்கள் இந்த சூழலை கவனமாக பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications