சீனா பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பல டேட்டா அந்நாட்டின் அரசு அடுக்கி வைத்தாலும், பல முக்கியமான விஷயங்களை மூடிமறைந்து வருகிறது. உதாரணமாக சீனாவில் வேலைவாய்ப்பின்மை அளவு மிகவும் மோசமாக உள்ளது, ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை படுமோசமாக உள்ளது.
ஆனால் இதுக்குறித்த விஷயங்களை பெரிய அளவில் வெளிவிடாமல் மறைத்து வருகிறது சீனா. இதேவேளையில் ரஷ்யா உக்ரைன் போர் மத்தியில் சுமுக பேச்சுவார்த்தை ஏற்படுத்தும் முயற்சிகளை செய்து வருகிறது. ஆனா மறுப்புறம் தைவான் எல்லையில் தொடர்ந்து ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

இது மட்டுமா அமெரிக்கா - சீனா மத்தியில் தொடர்ந்து கடுமையான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது. இதேபோல் பல விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக நிற்கும் சீனா உடனான உறவை மேம்படுத்த இரு நாட்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுய
உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் இலக்காகக் கொண்டு ஜூன் 18-19 க்கு இடையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பின்பு வருகிறார்.
இந்த பயணத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீனாவின் வெளியுறவு மந்திரி குயின் கேங்க் (Qin Gang) உடன் புதன்கிழமை பிளிங்கன் ஒரு பதட்டமான போன் கால்-ஐ எதிர்கொண்டாக். இந்த போன் காலில் அமெரிக்கா தனது விவகாரங்களில் தலையிடுவதையும் அதன் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதையும் நிறுத்துமாறு குயின் கேங்க் வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், திடீர் பயணமாக சீனா சென்று உள்ளார், இது மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமை பில் கேட்ஸ் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் பேச உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பல மாற்றங்களை செய்து வரும் சீனா, டெக் துறையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்த முயற்சிகளை கையில் எடுத்து உள்ளது. இதன் வாயிலாக மார்ச் மாதம் ஆப்பிள் சிஇஓ டிம் குக்-ஐ சீனாவின் ப்ரீமியர் Li Qiang சந்தித்து பேசினார், கடந்த மாதம் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்-ஐ துணை ப்ரீமியர் Ding Xuexiang சந்தித்து பேசினார்.
மார்ச் மாதத்தில் சீனாவில் உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்களை அழைத்து சீனாவின் ப்ரீமியர் Li Qiang சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications