அமெரிக்காவில் சில்வர்கேட் துவங்கி சிலிக்கான் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க், ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் ஆகிய அடுத்தடுத்து திவாலாகியும், நிதி நெருக்கடியிலும் மாடிக்கொண்டு அமெரிக்க வங்கி துறை பெறும் ஆபத்தில் மாட்டிக்கொண்டு சில வாரங்களுக்கு முன்பு தான் வங்கி திவால் அச்சத்தில் இருந்து வெளியேறியது. ஆனால் இன்னும் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீளவில்லை.
இதற்கிடையில் அமெரிக்க சந்தையில் இருந்த பெருமளவிலான முதலீடுகள் ஆசிய சந்தையில் திரும்பியுள்ளது, குறிப்பாக முதலீட்டாளர்கள் சீன சந்தையில் அதிகப்படியான முதலீடுகளை செய்ய துவங்கியுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகளின் நிதி நிலை மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ள காரணத்தாலும் அமெரிக்க சந்தை முதலீடுகள் இந்தியா போன்ற பல முன்னணி வளரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது.

இதன் எதிரொலியாக தான் டாலர் மதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து உலகின் பிற நாணயங்கள் மதிப்பு அதிகரித்து வருகிறது, இதில் இந்திய ரூபாயும் அடக்கம். இந்த நிலையில் சிட்டிபேங்க் செய்த ஆய்வில் சர்வதேச நிதிநிலைகளை ஆய்வு செய்யும் போது அமெரிக்காவின் நாணய கொள்கை இருக்கத்தை காட்டிலும் ஆசிய நிதியியல் சந்தை தளர்வாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் சிலிக்கான் வேலி வங்கி மார்ச் 10ஆம் தேதி திவாலானதில் இருந்து ஜப்பான் தவிர உலகின் பெரும்பாலான சந்தையில் வங்கித்துறை சிறப்பாகவே உள்ளது. ஆனால் அமெரிக்க வங்கித் துறை சிலிக்கான் வேலி வங்கி திவாலான காலக்கட்டத்தில் இருந்து சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது.
ஆசிய சந்தை வளர்ச்சி பாதையில் இருக்க மிக முக்கிய காரணம் நாணய கொள்கையில் இருக்கும் மாற்றங்கள் தான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேஷியா, இந்தியா ஆகியவை நாணய கொள்கையில் வட்டி உயர்வை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலக நாடுகள் தனது நாணய கொள்கையை இருக்கி வரும் வேளையில் சீனா தனது கொள்கையை பெரிய அளவில் தளர்த்து வருகிறது.
இதனால் ஆசிய சந்தை பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது, இதில் இந்திய சந்தை மீது பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் காரணத்தால் பல வகையில் இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் வர துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications