உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் கடந்த 6 மாதமாக பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு பிராந்திய வங்கிகள் எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்த சில நாட்களில் பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்பு பெரிய வங்கிகளின் நிதியுதவியால் திவாலாவதில் இருந்து காப்பாற்றப்பட்ட அமெரிக்காவின் First Republic Bank என்ற பிரபலமான பிராந்திய வங்கியின் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 20 சதவீதம் வரையில் சரிந்ததுள்ளது. இந்த திடீர் சரிவுக்கு என்ன காரணம்..? அமெரிக்காவில் அடுத்த வங்கி திவாலாக போகிறதா..?
First Republic Bank-ல் முதல் காலாண்டு முடிவில் மட்டும் சுமார் 100 பில்லியன் டாலராக டெபாசிட் தொகை குறைந்துள்ளது என இவ்வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து தான் First Republic Bank பங்குகள் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் தற்போது இவ்வங்கி தனது நிதிநிலையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் போதும் இதனுடன் 2 வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் சிக்னேச்சர் வங்கியை FDIC கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வாகம் செய்து வரும் வேளையில், First Republic Bank-க்கு பல முன்னணி வங்கிகள் நிதியுதவி செய்து திவாலாவதில் இருந்து காப்பாற்றியது. தற்போது மீண்டும் நிலைமை மோசமாகியுள்ளதாக தெரிகிறது.

முதல் காலாண்டில் First Republic Bank சிறப்பான லாபத்தை பதிவு செய்தாலும் 100 பில்லியன் டாலர் அளவிலான டெபாசிட் சரிவு செய்தி முதலீட்டாளர்களை பெரிய அளவில் பாதித்த நிலையில் இவ்வங்கி பங்குகள் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதை விரைவில் கட்டுப்பாடுத்தாவிட்டால் First Republic Bank-க்கும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டும் என்றால் மிகையில்லை.
இந்த நிலையை சமாளிக்க First Republic Bank நிர்வாகம் 2வது காலாண்டில் செலவுகளை குறைக்கும் விதிமாக உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்தையும், பங்கு இருப்பையும் குறைக்க உள்ளது. அலுவலக இடத்தை குறைப்பது, 20 - 25 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற முக்கியமான நடவடிக்கையை எடுக்க உள்ளது. இதேவேளையில் இவ்வங்கி நிர்வாகம் insured deposits-ஐ அதிகரிக்கவும், பெடரல் வங்கியிடம் பெறும் கடன் அளவையும் குறைக்க திட்டமிட்டு உள்ளது.
First Republic Bank தரவுகள் படி டிசம்பர் காலாண்டில் 179.43 பில்லியன் டாலராக இருந்த டெபாசிட் தொகை, மார்ச் காலாண்டு முடிவில் 104.47 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி வங்கிகளிடம் சுமார் 30 பில்லியன் டாலர் தொகையை நிதியுதவி பெற்ற பின்பு நடந்த பாதிப்பு என்பது தான் முதலீட்டாளர்களின் அச்சம்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications