ஐரோப்பிய பொருளாதாரத்தை பெரும் கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட Credit Suisse வங்கியின் நிதி நெருக்கடி பிரச்சனை உலக நாடுகளை பயமுறுத்தியது என்றால் மிகையில்லை. கிரெடிட் சூயிஸ் வங்கி திவாலானால் ஐரோப்பிய வர்த்தக சந்தையில் நிதி நெருக்கடி உருவாகி பொருளாதாரம், வர்த்தக சந்தை, வேலைவாய்ப்பு என அனைத்து பிரிவு மக்களையும் பாதிக்கும்.
இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த சுவிஸ் மத்திய வங்கி, Credit Suisse பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும் என முடிவு செய்தது. இதற்காக 2 நாளில் சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியான UBS நிர்வாகத்தை 2வது பெரிய வங்கியான Credit Suisse-ஐ மொத்தமாக கைப்பற்ற போதுமான நிதி ஆதாரங்களையும், பாதுகாப்பையும் கொடுத்தது சிவிஸ் மத்திய வங்கி.

இந்த ஒப்பந்தம் மூலம் சிவிஸ் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருக்கும் Credit Suisse-யின் அனைத்து விதமான வர்த்தகம், முதலீடுகளையும் UBS கைப்பற்றி பெரும் பிரச்சனை சமாளிக்கப்பட்டது. இந்த நிலையில் Credit Suisse உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் வேளையில் அமெரிக்க வர்த்தகம், முதலீடுகள் நிறுவனங்களை கைப்பற்ற முயற்சி செய்து ஒப்புதல் பெற்றுள்ளது.
Credit Suisse குழுமத்தின் அமெரிக்க துணை நிறுவனங்களை UBS Group AG கைப்பற்றுவதற்கு அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 22 அன்று யுபிஎஸ் குழுமம் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி கோரியதாக அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது, இதை தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கும் Credit Suisse-யின் அனைத்து சொத்துக்களும், செயல்பாடுகளும் இனி யூபிஎஸ் கட்டுப்பாட்டில் வர உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, Credit Suisse மற்றும் யுபிஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் அமெரிக்க வணிகங்களை இணைப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கிக்கு "ஒரு செயல்படுத்தல் திட்டத்தை" யூபிஎஸ் வழங்கும். இந்த திட்டம் காலாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்று மத்திய வங்கி வெள்ளிக்கிழமை கூறியது. மேலும் இணைப்பை கடுமையாக கட்டுப்பாடுகள் உடன் அரசு விதிமுறைக்கு கீழ் செயல்படுத்த உள்ளது.
இந்த நிலையில் UBS - கிரெடிட் சூயிஸ் கூட்டணி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, கிரெடிட் சூயிஸ்-ஐ நிர்வாகம் செய்ய UBS தனது முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Sergio Ermotti ஐ மீண்டும் CEO பதவியில் பணியமர்த்துவதாக UBS Group AG அறிவித்துள்ளது. இதன் மூலம் நவம்பர் 1 2020 முதல் UBS சிஇஓ-வாக இருக்கும் Ralph Hamers தற்போது Ermotti வருகையின் மூலம் வெளியேறுகிறார்.


Click it and Unblock the Notifications