அமெரிக்க அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் கடன் வரம்பை ஜூன் 1 ஆம் தேதிக்குள் உயர்த்தாவிடில் பல மக்கள் நல திட்டங்களுக்கும், மக்கள் சேவைக்கும் அரசு பணம் செலுத்த முடியாமல் போகும் மோசமான நிலையில் தான் உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது, இக்கூட்டத்தில் அந்நாட்டு அரசின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து உரிய முடிவு எடுக்காத பட்சத்தில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, நிதியியல் நெருக்கடிகள் உருவாகும் என பொருளாதார வல்லனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை அமெரிக்க வெள்ளை மாளிகை கடன் வரம்பை உயர்த்தாமல் நிதிநெருக்கடியில் சிக்கினால் அமெரிக்காவில் சுமார் 80 லட்சம் வேலைவாய்ப்புகள் சில நாட்களில் பாதிக்கப்படும், பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் சரியும் என எச்சரித்துள்ளனர். இதுக்குறித்து வெள்ளை மாளிகையில் பொருளாதார ஆலோசகர் கவுன்சில் முக்கியமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதிக்குள் நாட்டின் கடன் வரம்பு உயர்த்த முடியாமல் மாட்டிக்கொண்டால், 83 லட்சம் வேலைவாய்ப்புகள் ஒரே இரவில் மாயமாகும், அமெரிக்க பொருளாதாரம் -6.1 சதவீதம் வரையில் சரியும், பங்குச்சந்தை சந்தை மதிப்பு பாதியாக குறையும், அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை 5 சதவீதத்திற்கு மேல் உயரும் என வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜெனட் யெலன் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்காவிடில் அரசு திவாலாகிவிடும் என தெரிவித்தார். இதை சரி செய்ய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அமெரிக்க அரசு ஒவ்வொரு மாதம் மக்களின் பல்வேறு சேவைகளுக்காகவும், அரசு அதிகாரிகளின் சம்பளம் முதல் பலவற்றுக்கும் சேர்த்து மாதம் 525 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்கிறது. இதில் பாதி அதாவது 225 பில்லியன் டாலர் தொகையை கடந்த 3 மாதமாக நிதி பற்றாக்குறையால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளது.
அமெரிக்க அரசின் தரவுகள் படி ஜனவரி 19 ஆம் தேதியே அரசின் அதிகப்படியான கடன் வரம்பை எட்டியுள்ளது, ஆனால் கடந்த சில மாதங்களாக கணக்கியல் மாற்றத்தின் வாயிலாக இதை சரி செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது, இந்த கணக்கியல் மாற்றத்தின் வாயிலாக ஜூன் 1 வரையில் அமெரிக்க அரசு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்க முடியும்.
அமெரிக்காவின் தேசிய கடன் அளவு முதல் முறையாக 31 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டியுள்ளது, இந்த நிலையில் அமெரிக்க அரசின் அதிகப்படியான கடன் வரம்பு 31.381 டிரில்லியன் டாலராகும். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்தால் சீட்டுக்கட்டு போல உலக நாடுகளின் பொருளாதாரம் சரியும் என்பது தான் அடுத்த பிரச்சனை, இதில் இந்தியாவும் அடங்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications