உலகிலேயே மோசமான பொருளாதாரத்தைக் கொண்டு இருக்கும் நாடுகளில் முக்கியமானதாக மாறி வரும் பாகிஸ்தான் எப்படியாவது திவால் ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது. மேலும் தனது வர்த்தகத்தை இந்தியாவுடன் மேம்படுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கும், நீண்ட தூரம் பயணித்துத் தாக்கும் ஏவுகணைத் திட்டத்திற்கும் 2 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உதவியுள்ளதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஏவுகணைத் திட்டத்திற்கு (ballistic missile programme) உதவி செய்து வந்த சீனா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்திற்கு, குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை திட்டத்திற்கு (long-range missile programme) உதவி செய்து வந்த சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களில் Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade, Granpect Co. Ltd ஆகியவையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த Minsk Wheel Tractor Plant நிறுவனமும் அடக்கம்.

இந்த நிறுவனங்கள் பாகிஸ்தானின் அணு ஆயுத பரவல் திட்டத்திற்கு உதவி புரிவதன் மூலம், சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பாகிஸ்தான் தயாரிக்கவும், தடை செய்யப்பட்ட பொருட்களைப் பாகிஸ்தான் தயாரித்தல், கையகப்படுத்துதல், வைத்திருத்தல், உருவாக்குதல், பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, முறையற்ற ஆயுத திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் கொள்முதல் நெட்வொர்க்குகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் நட்பு நாடாக அனைத்து காலங்களிலும் உதவி புரிந்து வரும் சீனா, இஸ்லாமாபாத்தின் ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு (military modernisation programme) முக்கிய ஆயுத மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் வழங்குபவராக இருந்து வருகிறது. இந்த தடை நடவடிக்கை குறித்து சீனா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications