கூகுள், அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ கருவிகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. இது நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை ஊக்குவிப்பதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன .
கூகுளை பொறுத்தவரை பெரும்பாலான கோடிங் வேலைகளை ஏஐ கருவிகள் வசம் ஒப்படைத்து விட்டதாக சுந்தர் பிச்சையே ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதன்படி கூகுளில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக வேலை செய்யக்கூடிய நபர்கள் தினமும் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும், குறிப்பாக கோடிங் எழுதுவதற்கு ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.

கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆர்டர் போட்டு இருக்கிறார் . கூகுள் ஊழியர்கள் வேலையில் ஏஐ பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன . எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் உடனடியாக சக ஊழியரை கேட்காமல் ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்குங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறதாம்.
கூடிய விரைவில் ஊழியர்களுக்கான பெர்ஃபாமன்ஸ் ரிவியூ என்பது அவர்கள் வேலையில் எப்படி திறமையாக செயல்படுகிறார்கள் என்பதை தாண்டி ஏஐ கருவிகளை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவு செய்யப்படுமாம். பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின் படி கூகுள் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவுக்கான துணைத் தலைவர் கச்சோலியா அனைத்து பொறியாளர்களுக்கும் ஒரு மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து இன்ஜினியர்களும் கண்டிப்பாக கோடிங் பணிகளுக்கு கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஏஐ கருவிகளை அன்றாடம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறாராம் .
ஒருவேளை கோடிங் அல்லாத பிற வேலைகளுக்கு கூகுள் நிறுவனம் அல்லாத மற்ற நிறுவனங்களின் ஏஐ கருவிகளை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னதாக தலைமை அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருக்கிறதாம் . தற்போது அனைத்து மேலாளர்களும் தங்களின் கீழ் பணி புரியக்கூடிய ஊழியர்களிடம் தினமும் அவர்களுடைய வேலையில் எத்தனை சதவீதம் ஏஐ கருவிகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை ரிப்போர்ட்டாக வழங்க அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.
இனி வரும் நாட்களில் கூகுள் ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை எல்லாம் அவர்களின் வேலை திறனை மட்டுமே அடிப்படையாக கொள்ளாமல் அவர்கள் ஏஐ கருவிகளை எப்படி பயன்படுத்து கொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாக கொண்டு தான் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிக அளவில் ஏஐ பயன்படுத்தும் ஊழியர்களுக்கு பல்வேறு அங்கீகாரமும் பரிசுகளும் வழங்கப்படுகிறதாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications