ஐக்கிய அரபு நாடுகளில் வாட் வரி : தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

துபாய் : நமது இந்திய நாட்டில் வாட் அறிமுகப்படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் நடைமுறைக்குப் பிறகு நாம் ஜி.எஸ்.டி.க்கு மாறிக் கொண்டிருக்கிறோம். ஐக்கிய அரபு நாடுகளில் இப்போதுதான் வாட்டுக்கு மாறுகிறார்கள்.

2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளின் நுகர்வோர்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் விலையின் மீதும், சேவைகளின் மீதும் 5% மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்த வேண்டியிருக்கும்..

வளைகுடா ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆறு நாடுகள் வாட் வசூலிக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 25 பில்லியன் டாலர்கள் (91.8 பில்லியன் தினார்கள்) வரி வருவாயாக ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கத் துவங்கும்.
புதிய வரிக்கொள்கை அமலுக்கு வர இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் மேலும் பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. வளைகுடா செய்திகள் நிறுவனம் பல்வேறு தரப்புகளிலிருந்து இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காணுவதற்குரிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது.

பல்பொருள் அங்காடியில் நான் பொருள்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் வாட் செலுத்த வேண்டுமா?

பல்பொருள் அங்காடியில் நான் பொருள்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் வாட் செலுத்த வேண்டுமா?

இல்லை. உங்கள் வணிக வண்டியில் உள்ள பொருள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாட் டிலிருந்து விலக்கு உண்டு. வளைகுடா ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே 94 உணவுப் பொருள்களுக்கும், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பொருள்களுக்கும் விளக்கு அளிக்கப்படுவதாக நிதித்துறை செயலர் யூனிஸ் அல் கொரி கூறியுள்ளார். அதாவது, உங்களின் மருத்துவமனை மற்றும் கல்வி கட்டங்கங்களில் விலை உயர்த்தப்படாதவரை மாற்றங்கள் ஏதுமில்லை. எந்தப் பொருள்களுக்கு வரி விதிப்புக் கிடையாது என்பதற்கான புதிய சட்டம் வெளியிடப்படவேண்டும்.

கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?

கூடுதல் தொகை செலுத்த வேண்டுமா?

ஆமாம். அத்தியாவசியமல்லாத பொருள்களின் மீது வாட் விதிக்கப்படுவதால், மின்னணு பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் சில அதிக விலை பொருள்கள் வாங்கும்போது வாட் செலுத்தியாக வேண்டும். 2,600 தினார்கள் மதிப்புள்ள புதிய மொபைல் போன் வாங்க விரும்பினால், கூடுதலாக 130 தினார்கள் செலுத்த வேண்டி வரலாம். RSM நிறுவன பங்குதாரரான ராகேஷ் பர்தசணி "அத்தியாவசியமற்ற பொருள்கள் வாங்கும்போது கட்டாயமாகக் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்" என்று கூறினார். மேலும் சில பொருள்களை வாங்கும்போது கடைசி நுகர்வோர் கூடுதலாக 5 சதவீதம் செலுத்த வேண்டி ஏற்படலாம்.

விமான டிக்கெட்டுகள் வாங்கும்போது கூட வாட் விதிக்கப்படுமா?

விமான டிக்கெட்டுகள் வாங்கும்போது கூட வாட் விதிக்கப்படுமா?

இன்னமும் வாட் விதிகள் சரிவர வரையறுக்கப்படாததால் இதற்கான சரியான பதில் அளிக்க இயலாது. ஆனால் வாட் அமல்படுத்தப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பு நோக்கும்போது வாட் விதிப்பினால் விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை. பிரிட்டனிலும், சிங்கப்பூரிலும் பயணிகள் கட்டணத்திற்கு ௦% வாட் தான் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஐக்கிய அரபு நாடுகளிலும், விமான டிக்கெட்டுகளுக்கு ௦% வாட் தான் விதிக்கப்படும் என்று பர்தசணி கூறுகிறார்.

5% வாட் விதிப்பு ஐக்கிய அரபு நாடுகளின் வாழ்க்கை நடத்துவதற்கான செலவை அதிகரிக்குமா?

5% வாட் விதிப்பு ஐக்கிய அரபு நாடுகளின் வாழ்க்கை நடத்துவதற்கான செலவை அதிகரிக்குமா?

ஒரு தனிநபரின் வாங்கும் சக்தி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், பெரும்பாலானோரின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கலாம். நீங்கள் விலை உயர்ந்த பொருள்களை வாங்கிச் செல்வது அதிகரித்தால் உங்களின் வரிச் செலவினமும் அதிகரிக்கலாம். வாட் விதிக்கப்பட்ட பொருள்களை வாங்காதவரை வாழ்க்கைச் செலவினம் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர வாய்ப்பில்லை என எமிரேட்டின் சார்டர்ட் அக்கௌன்டன்ட்கள் கூறுகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் கூட வாட் செலுத்த வேண்டுமா?

சுற்றுலாப் பயணிகள் கூட வாட் செலுத்த வேண்டுமா?

ஆமாம். ஐக்கிய அரபு நாடுகளின் மிகப் பெரிய வருவாய் இனமான சுற்றுலா செலவினம் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் பொருள் வாங்கும் சக்தி ஆகியவை இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற முடியாது. வாசனைத் திரவியங்கள், மேக்கப் சாதனைகள், ஆடம்பர பைகள், பிற விலை உயர்ந்த பொருள்களை வாங்கும்போது விற்பனை விலைக்கு மேல் 5% கூடுதலாகச் செலுத்த வேண்டும். வாட் விதிப்பு நுகர்வோருக்குச் சுமையாக இல்லாமல் அனைவரும் சுலபமாகச் செலுத்த தக்க அளவிலேயே இருக்கும் எனப் பொருளாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

வேறு என்ன வரி விதிப்புகளை ஐக்கிய அரபு நாடுகள் பரிசீலிக்கின்றன?

வேறு என்ன வரி விதிப்புகளை ஐக்கிய அரபு நாடுகள் பரிசீலிக்கின்றன?

"உலகளாவிய வரி செயல்பாடுகளின்படி ஐக்கிய அரபு நாடுகள் வேறு பல புதிய வரி நடைமுறைகளைக் குறித்துப் பரிசீலித்து வருகிறது. எதிர்காலத்தில் அவை அறிமுகப்படுத்த படலாம். தனி நபர் வருமான வரித் திட்டங்களைத் தற்போது ஐக்கிய அரபு நாடுகள் பரிசீலிக்கவில்லை." என நிதி அமைத்தார் கூறுகிறார்.

வாட் வசூல் செய்யாவிட்டால் வர்த்தக நடைமுறைகள் மீது தண்டம் விதிக்கப்படுமா?

வாட் வசூல் செய்யாவிட்டால் வர்த்தக நடைமுறைகள் மீது தண்டம் விதிக்கப்படுமா?

அனைத்து வர்த்தகங்களும், புதிய வரி நடைமுறைகளை அமல்படுத்திட ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால், நிதி அமைச்சகம் "தற்போது இந்த நடைமுறைகளைப் பின்பற்றி நடக்காதவர்களுக்குச் சரியான கட்டணங்கள் மற்றும் தண்டம் விதிப்பதற்குரிய வழிமுறைகளை அரசாங்கம் வரையறுத்து வருகிறது." என்று தெரிவித்துள்ளது.

வாட் வரிக்கான பதிவு எப்போது துவங்குகிறது?

வாட் வரிக்கான பதிவு எப்போது துவங்குகிறது?

01.10.2017 அன்று அனைத்து வர்த்தகர்களும் வாட்டுக்கான தங்களது பதிவுகளைத் துவக்குவர். ஏற்கனவே அறிவித்தபடி, மூன்று மாதங்களுக்கு இந்தப் பதிவு வேலைகள் நடக்கும். நிறுவனங்கள் இணையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.

வாட் ரிட்டர்ன்ஸ் எவ்வளவு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்?

வாட் ரிட்டர்ன்ஸ் எவ்வளவு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்?

பெரும்பாலான நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வாட் ரிட்டர்ன்ஸ் செய்யப்படவேண்டும். இதனை அரசின் ஈ-சேவையைப் பயன்படுத்தி இணையத்திலும் செய்யலாம்.

வாட்டுக்காக நிறுவனங்கள் எப்படித் தயார் செய்து கொள்வது?

வாட்டுக்காக நிறுவனங்கள் எப்படித் தயார் செய்து கொள்வது?

வாட்டுக்காக நிறுவனங்கள் தயார் செய்து கொள்வது தொடர்பாக நிதி அமைச்சகம், "வர்த்தகர்கள், நிதி நிர்வாகம் மற்றும் கணக்குப் பராமரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் ஆகியவை தொடர்பான தங்களின் முனைப்பான செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளது. மேலும், நிறுவனங்கள் வாட் அமல்படுத்தலைப் புரிந்துகொண்டு, வர்த்தகச் செயல்பாடுகள் தொடர்பாக அரசுக்கு அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும். வர்த்தகர்கள் தங்களது வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்போது, வாட் வரிச் சுமை நுகர்வோருக்கு விதிக்கப்படும் என்ற ஒரு உட்பிரிவை உருவாக்கிட வலியுறுத்தப்படும்.

உரிய சட்டம் வெளியிடப்பட்டவுடன் நிறுவனங்கள் தங்களது எந்தப் பொருளுக்கு அல்லது எந்தச் சேவைக்கு வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது வரி விதிக்கக்கூடாது என்பது குறித்து முடிவெடுத்து, பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களில் உரியத் திருத்தங்கள் செய்து, வரி விதிக்கக்கூடிய அனைத்துப் பொருள்களுக்கும், வாட் விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

வாட் தொழில்முறை பணியாளர்களை நிறுவனங்கள் வாடகைக்குப் பணியமர்த்த வேண்டுமா?

வாட் தொழில்முறை பணியாளர்களை நிறுவனங்கள் வாடகைக்குப் பணியமர்த்த வேண்டுமா?

இந்த நேரத்தில் புதிய வரிக் கொள்கையினை அமல்படுத்தும் பொருட்டு, புதிய பணியாளர்களைப் பணியமர்த்துவது அவசியமானதாகும். வாட் அமலில் இனைந்துகொள்ளக் கூடுதல் ஆதாரங்கள் குறித்து நிறுவனங்கள் ஆலோசிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+