வெரிசான் நிறுவனம் யாஹூ நிறுவனத்தை 4.48 பில்லியன் டாலர் அளித்து வாங்கியதை அடுத்து அடுத்த வாரம் முழுமையாக யாஹூவின் சொத்துக்கள் வெரிசானிற்கு மாற்றப்படுகின்றது என்றும் அப்போது 2,000 ஊழியர்களை வரை வெளியேற்றப்படுவார்கள் என்றும் இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழியர்கள் வெளியேற்றம் வெர்சானின் ஏஓஎல் மற்றும் யாஹூ என இரண்டு பிரிவுகளில் இருந்து மட்டும் நடைபெற இருக்கின்றது.
பணி நீக்கத்தில் காலிப்போர்னியாவில் உள்ள அலுவலகத்தில் அதிகப்படியாகின ஊழியர்களும் சிலர் மட்டும் அமெரிக்காவைத் தவிர்த்த பிற நாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்களாம்.
சில நாட்களில் முழு இணைவு
யாஹூ முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் வரும் செவ்வாய் கிழமையுடன் யாஹூ நிறுவனம் முழுமையாக வெரிசான் நிறுவனத்தில் இணைக்கின்றது என்று தெரிவித்தனர்.
யாஹூ வெர்சான் டீல்
அமெரிக்காவின் நம்பர் 1 வையர்லெஸ் ஆப்ரேட்டர் நிறுவனமான வெரிசான் யாஹூ தேடு பொறி மின்னஞ்சல், மெசெஞ்சர் சொத்துக்கள் மற்றும் விளம்பர தொழில்நுட்பங்களை ஏஓஎல் பிரிவுக்கும் 2016-ம் ஆண்டு 4.4 பில்லியன் டாலர் அளித்து வாங்கியது.
வெரிசான் நிறுவனம் வயர்லெஸ் நெட்வொர்க் மட்டும் இல்லாமல் மொபைல் வீடியோ மற்றும் விளம்பரம் மூலமாகப் புதிதாக வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
பெயர் மாற்றப்படும் ஏஓஎல்
யாஹூ வெர்சான் நிறுவனத்துடன் இணைந்த உடன் ஏஓஎல் மற்றும் யாஹ்வ்வை ஒன்றாக இணைத்து ஓத் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கும் பணிகளை வெரிசான் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்குத் தலைவர் பொறுப்பை ஏஓஎல் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஆம்ஸ்ட்ராங் பொறுப்பேற்பார்.
மரிசா மேயர்
யாஹூ நிறுவனத்தில் 2012-ம் ஆண்டுத் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு ஏற்ற மரிசா மேயர் யாஹூ வெர்சான் டீல் முடிந்த உடன் முழுமையாக நிறுவன செயல்பாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்.
வெரிசானின் அதிரடி திட்டம்
யாஹூவின் 200 மில்லியன் பயனர்கள், ஏஓஎல் நிறுவனத்தின் 150 மில்லியன் பயனர்கள் மற்றும் 100 மில்லியன் வயர்லெஸ் சந்தாதார்கள் தரவை வைத்து வெரிசான் டிஜிட்டல் விளம்பர உலகில் பெறும் புரட்சியை ஏற்படுத்த இருக்கின்றது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications