ரஷ்யாவுக்கு விழுந்த பலத்த அடி.. ரெசிஷன்-க்குள் என்ட்ரி.. புடின்-க்கு காத்திருக்கும் சவால்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக வர்த்தக அமைப்பு (WTO) ரெசசன் குறித்து பல முன்னணி பொருளாதார நாடுகளை எச்சரித்துள்ளது. இதற்கிடையில் இதனை உறுதிபடுத்தும் விதமாக ரஷ்யா மந்த நிலைக்குள் நுழைந்துள்ளதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

 

உலக வர்த்தக அமைப்பின் தலைவர் உக்ரைனில் நிலவி வரும் போர் பிரச்சனையால் அதிகரித்து வரும் உணவு பொருட்கள் விலை மற்றும் எரிபொருட்கள் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகின்றது.

இதனால் பல்வேறு பெரிய பொருளாதார நாடுகளும் மந்த நிலையை எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்தினை எதிர்கொள்கின்றன என எச்சரித்துள்ளார்.

மந்த நிலையை எதிர்கொள்ளலாம்

மந்த நிலையை எதிர்கொள்ளலாம்

இது எல்லா இடத்திலும் நிகழாது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் மந்த நிலைக்கு தள்ளப்படலாம் என உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர், Ngozi Okonjo-Iweala தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்ட வர்த்தக அமைப்பு கடந்த மாதம் உலக வர்த்தகம் 2023ல் 1% மட்டுமே உயரும் என கணித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3.5% ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

பல சவால்கள்

பல சவால்கள்

இங்கு பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. பெரும்பாலான பிரச்சனைகள் எதிர்மறையாகவே உள்ளன. உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளன என சுட்டிக் காட்டியுள்ளது.

எனினும் இந்த எந்த நாடுகள் மந்த நிலையினை எதிர்கொள்ளலாம். இது எத்தனை காலத்திற்கு நீட்டிக்கலாம் என வெளியாகவில்லை.

ரஷ்யா மந்த நிலை
 

ரஷ்யா மந்த நிலை

WTI அறிக்கையினை மெய்யாக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியானது 4% சரிவினைக் கண்டுள்ள நிலையில், ரஷ்யா மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது. இது ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதன் காரணமாக ரஷ்யாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது.

முதல் இரண்டு காலாண்டிலும் வீழ்ச்சி

முதல் இரண்டு காலாண்டிலும் வீழ்ச்சி

ரஷ்யா மூன்றாவது காலாண்டில் அதன் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4% சரிவினைக் கண்டுள்ளதாக அதன் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் தொடர்ந்து முதல் இரண்டு காலாண்டுகளாக வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்ட நிலையில், மூன்றாவது காலாண்டிலும் சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யா மந்த நிலைக்குள் நுழைகிறது.

 முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் காலாண்டிலும் ரஷ்யாவின் பொருளாதார உற்பத்தியானது 4% சரிவினைக் கண்டது. இது பல பொருளாதார வல்லுனர்கள் கணித்த 4.5%-ஐ விட குறைவு என்றும் கூறப்படுகிறது.

இதே மொத்த வர்த்தகத்தில் 22.6% சரிவினைக் கண்டுள்ளது. இதே சில்லறை வர்த்தகமானது 9.1% சரிவினைக் கண்டுள்ளது. இது ரஷ்யாவின் சரிவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

வளர்ச்சி பகுதி எது?

வளர்ச்சி பகுதி எது?

எனினும் இந்த மந்த நிலையிலும் கட்டமைப்பு துறையானது 6.7% ஏற்றம் கண்டுள்ளது. இதே விவசாயத் துறையானது 6.25 வளர்ச்சி கண்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சியானது சரிவினைக் கண்டால், அது மந்த நிலை என வரையறுக்கப்படுகிறது.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

ரஷ்யா கடந்த 2020ம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2021ம் ஆண்டின் முற்பகுதியிலும் தொழில்நுட்ப மந்த நிலையை அனுபவித்தது. அந்த சமயத்தில் உலகம் கொரோனா காரணமாக பெரும் சரிவினைக் கண்டது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவின் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சி காணத் தொடங்கியது. எனினும் உக்ரைன் தாக்குதலுக்கு பிறகு மீண்டும் சரியத் தொடங்கியது.

ஊழியர்களுக்கு பற்றாக்குறை

ஊழியர்களுக்கு பற்றாக்குறை

தொடர்ந்து ரஷ்யாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அங்கு ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் நிறுவனங்கள் வணிகம் செய்வதும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதுவும் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி

எண்ணெய் ஏற்றுமதி

ரஷ்யாவின் வேலையின்மை விகிதமானது கடந்த செப்டம்பர் மாதத்தில் 3.9% ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அதன் எனர்ஜி ஏற்றுமதி தான். இது அதன் மொத்த வருவாயில் 40% பங்கு வகிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

very sad: Russia enters recession, GDP falls by 4% in 3rd quarter

Preliminary estimates indicate that Russia has enters recession. Russia's GDP rate has fallen for the third consecutive quarter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X