வியட்நாம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியிருப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவுக்கு மாற்று சந்தையாக உருவாகி வருகிறது. இந்த வளர்ச்சி பாதையில் வியட்நாம் அரசு காலம் காலமாக சீன முதலீடுகளும், சீன நிறுவனங்களுக்கும் கதவுகளை மூடியே வைத்திருந்த நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிகவும் முக்கியமானதாக பார்க்கும் வேளையில் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் விரைவான முடிவுக்கு வந்தது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் 46 சதவீத வரியை 20 சதவீதமாக குறைத்தது. இதேபோல் அமெரிக்க முதலீடுகளும் கதவுகளை திறந்தது வியட்நாம்.

இந்த நிலையில் வியட்நாம் ஒரு முக்கியமான முடிவை எடுத்தது, அமெரிக்காவுடன் எப்போதும் இல்லாமல் நட்பு பாராட்டும் நிலையில், அண்டை நாடாக இருக்கும் சீனாவுடன் நட்புறவு வேண்டும் என முடிவு செய்து சீனாவுக்கு கதவுகளை திறந்தது. இதன் விளைவு அமெரிக்கா கடுப்பானது.
அமெரிக்கா சீனாவின் இணைப்பை குறைக்க வேண்டும் (decoupling) என்ற கொள்கையை மீறி வியட்நாம், சீன நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. இதன் வாயிலாக 2025இல் சீன முதலீடு வியட்நாமுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது, அதே சமயம் சீனப் பொருட்களின் ஏற்றுமதியும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வியட்நாம் தற்போது சீனாவின் ஹூவாவே, ZTE போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களை கொடுத்துள்ளது, அதிவேக ரயில் திட்டங்களுக்கு சீனக் கடன்களை பெற்றுள்ளது, முன்னணி விமான நிறுவனத்துக்கு சீன COMAC விமானங்கள் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளகு. இவை அனைத்தும் வியட்நாம் அரசு பல ஆண்டுகளாக பாதுகாப்பு காரணங்களால் தவிர்க்கப்பட்டவை என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
வியட்நாம் நீண்ட காலமாக அமெரிக்கா-சீனா மத்தியிலான முதலீட்டுக்கு ஒதுங்கியே இருந்த நிலையில், ரெசிப்ரோக்கல் பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனாவுடன் இணைப்பை அதிகரித்து. இரு பெரும் பொருளாதார நாடுகள் மத்தியில் சமநிலையான உறவை நிலைநாட்டும் கொள்கைக்கு வந்துள்ளது.
வியட்நாம் 1979 போர் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினையும் காரணமாக சீனாவை எச்சரிக்கையுடன் அணுகியது. இப்போது அமெரிக்காவின் 20 சதவீத வரி மற்றும் வர்த்தக ஒப்பந்தம் காரணமாக வியட்நாம் சீனாவை நோக்கி திரும்பியுள்ளது.
ஆனால் வியட்நாம் நாட்டின் இந்த நிலைபாடு தொடர்ந்தால் ஒரு torn country ஆகலாம் என்று ஆசியா பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் அலெக்ஸாண்டர் வூவிங் எச்சரிக்கிறார்.
சீன நிறுவனங்கள் இப்போது வியட்நாமை வெறும் உற்பத்தி மையமாக மட்டும் பார்க்கவில்லை, நுகர்வோர் சந்தையாகவும் பார்க்கும் காரணத்தால். யாருக்கும் கொடுக்காத தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் வியட்நாம்-க்கு கொடுத்து வருகிறது சீனா.
அமெரிக்க வரிகள் காரணமாக சீனப் பொருட்கள் வியட்நாமை வழியாக அமெரிக்காவுக்குச் செல்கின்றன, இதுவும் சீன முதலீடுகள் வியட்நாம் நாட்டில் குவிய முக்கிய காரணமாக உள்ளது. இது வியட்நாமின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினாலும், மேற்கத்திய நாடுகளுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அச்சம் உள்ளது.
தற்போது சீனாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான Yadea, BYD, Tiktok, அலிபாபா-வின் Lazada, டென்சென்ட் முதலீட்டில் இயங்கும் Shopee மற்றும் Tiki, பேட்டரி தயாரிப்பு நிறுவனமான CATL-ன் கிளை நிறுவனமான CNTE என சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்கள் வியட்நாம்-ல் முதலீடு செய்து, உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பெரும் பகுதி அமெரிக்காவுக்கும் செல்கிறது.
இப்படி சீனா தனது வர்த்தகத்தை வியட்நாம் வைத்து உலக நாடுகளுக்கு பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் சீனா நிறுவனங்கள் தான் தற்போது வியட்நாம் நுகர்வோர் சந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது, இதனால் பல சிறிய வியட்நாம் நிறுவனங்கள் சீனாவால் சூறையாடப்பட்டு கூட்டணியிலோ அல்லது விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால் ரெசிப்ரோக்கல் வரி ஒப்பந்தத்தில் அமெரிக்க பொருட்களுக்கு வியட்நாம் நாட்டில் ஜீரோ வரி சலுகை பயனில்லாமல் போகிறது என்பது தான் டிரம்ப் அரசுக்கு தற்போதைய கடுப்பு.
More From GoodReturns

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்போது? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி!!

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

கனடா, கிரீன்லாந்து வேலைக்கு ஆகல.. இப்போ வெனிசுலா-வை இழக்கும் டிரம்ப்.. அதென்ன #51..?!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?



Click it and Unblock the Notifications