உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவிற்குப் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் கடுமையான நெருக்கடி அளித்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 4வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற உள்ளார்.
99.83 சதவீத வாக்கு எண்ணிக்கை
ரஷ்யாவில் அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.00 மணி அளவில் 99.83 சதவீத வாக்குகளைக் கணக்கிடப்பட்ட நிலையில் தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுமார் 76.66 சதவீத வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத நிலையில் வெற்றி பெற உள்ளார்.
அடுத்தடுத்த இடங்கள்
அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினுக்கு அடுத்ததாகக் குருதினின் 11.01 சதவீத வாக்குகளைப் பெற்று 2வது இடத்திலும், 5.66 சதவீத வாக்குகளுடன் Zhirinovsky 3வது இடத்திலும், 1.67 சதவீத வாக்குகளுடன் Sobchak 4வது இடத்திலும் உள்ளனர்.
மொத்த வாக்குகள்
இந்த அதிபர் தேர்தலில் 7.337 கோடி பேர் வாக்கு அளித்துள்ளதாகவும், இதுவரை நடந்த அதிபர் தேர்தல்களிலேயே இந்த முறைதான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது என ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையர் Ella Pamfilova தெரிவித்தார்.
6 வருடம்
இந்த வெற்றி மூலம் விளாடிமிர் புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய சாம்ராஜியத்தின் அதிபராக இருக்கப்போகிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டு 4 வருடமாக இருந்த அதிபர் பணி காலத்தை 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
ஸ்டாலின்
ரஷ்யாவை நீண்ட காலம் ஆண்ட சேவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் அவர்களை விடப் புதின் அதிக ஆண்டுக் காலம் ரஷ்யாவின் அதிபராக உள்ளார்.
அமெரிக்கா - ரஷ்யா
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா உலகின் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கு எதிர் எதிராகவே நிற்கும் நிலையில், இன்னும் 6 ஆண்டுகளுக்கு இதேநிலை தொடரும் என்பது அச்சத்தை ஏற்படுகிறது. தற்போது நடந்த சிரியா பிரச்சனையிலும் இரு நாடுகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சொல்லப்போனால் அமெரிக்காவை எதிர்க்க புதின் போல் ஒரு தலைவர் தேவை.


Click it and Unblock the Notifications