வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-க்கு நட்பை வெளிப்படுத்தும் விதமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஒரு புத்தம் புதிய சொகுசு லிமோசின் காரை பரிசாக வழங்கியுள்ளார். 'ஆரஸ் செனட்' (Aurus Senat) என்ற அந்த சொகுசு கார் ஒரு பரிசாக அளிக்கப்பட்டது மூலம் ரஷ்யா வடகொரியா-வுக்கு எதிரான ஐ.நா.வின் தடைகளை மீறியதற்காக என்று விமர்சிக்கப்படுகிறது.
வடகொரியாவுக்கு கார்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வழங்குதல், விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்ய ஐ.நா. தடை விதித்துள்ளது. இதற்கு மத்தியில் புதின் இந்தப் பரிசை அளித்துள்ளார்.

விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ வாகனம் இந்த ஆரஸ் செனட் லிமோசின் ரக காராகும். ஆரஸ் செனட் 2018 இல் உலகளவில் அறிமுகமானது. முதலில் ரஷ்ய அதிபருக்காக 'கார்டேஜ்' என்ற குறியீட்டு பெயரில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆரஸ் செனட் காரில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க பார்த்திடுவோம். ஆரஸ் செனட் கார் 5,631 மிமீ நீளமும், 2,700 கிலோ எடையும் கொண்டது. அதிபர் புதினின் நீட்டிக்கப்பட்ட லிமோசின் 6,700 மிமீ அளவைக் கொண்டுள்ளது வெடிகுண்டு தாக்குதல்களிடமிருந்து கவசப் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
இதில் குண்டு துளைக்காத கவசம், வலுவூட்டப்பட்ட கண்ணாடி, வெடிகுண்டு-எதிர்ப்பு தரைவழி பாதுகாப்பு, ரன்-பிளாட் ரப்பர் டயர்கள், ஒருங்கிணைந்த "தாக்குதல்" ஆயுதங்கள் மற்றும் ஆட்டோமேடிக் ஆக்ஸிஜன் சப்ளை ஆகிய அம்சங்கள் அடங்கும்.
காரின் மத்தியில் பெரிய டிஎப்டி டிஸ்ப்ளே, சென்டர் கன்சோலில் ஸ்லாட் செய்யப்பட்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டூயல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட்களை இந்த மாடல் கொண்டுள்ளது. பின் இருக்கைகள் தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் உள்ளன.
இந்த லிமோசின் 6.6 லிட்டர் V12 இன்ஜினுடன் 850 bhp திறன் கொண்டது. ரஷ்யாவில் மோட்டார் போர்ஷே இன்ஜினியரிங் ஆக்சஸரிகளுடன் உருவாக்கப்பட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆடம்பர கார்களுக்கு புதியவர் அல்ல. அவரிடம் மிகப் பெரிய சொகுசு கார் கலெக்ஷன் உள்ளது.
அதில் குறைந்தது இரண்டு Maybach 62s, ஒரு Mercedes-Maybach S650, ஒரு Lexus LX, ஒரு Mercedes-Maybach GLS 600 அடங்கும். புதிய ஆரஸ் செனட் இப்போது இந்தப் பட்டியலில் கூடுதலாக சேர்ந்துள்ளது.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications