ஆட்டோமொபைல் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இதற்காகச் சீனாவில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
டெஸ்லா தனது எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது மூலம் ஆட்டோமொபைல் துறை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள நிலையில், வோக்ஸ்வாகன் தனது பறக்கும் கார் மூலம் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் மாற்ற உள்ளது.
ஆட்டோமொபல் துறை
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிய ஆட்டோமொபல் துறை, தற்போது தானியங்கி மற்றும் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் பணியில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நிறுவனமான வோக்ஸ்வாகன் சீன சந்தையில் கூட்டணியில் பறக்கும் கார் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
சீன சந்தைகள்
தானியங்கி கார்களைத் தாண்டி வெர்டிகல் மொபிலிட்டி கான்செப்ட்-ஐ நினைவாக்கும் முயற்சியாக அடுத்த அடியை எடுத்து வைக்க முடிவு செய்துள்ளது, இதற்காகச் சீன சந்தைகளுடன் கூட்டணி வைக்கவும் வோக்ஸ்வாகன் முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வோக்ஸ்வாகன் நிறுவனம்
வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் சீன சந்தைகள் உடனான கூட்டணி மூலம் வெர்டிகல் மொபிலிட்டி கான்செப்ட்-ஐ நினைவாக்கும் அனைத்து விதமான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே தற்போது முதற்கட்ட பணியாக உள்ளது. ஆய்வுகள் மற்றும் சோதனைகள் வெற்றியாகும் பட்சத்தில் உற்பத்திக்குத் தயாராகும்.
சீன ஆட்டோமொபைல் சந்தை
உலகிலேயே மிகப்பெரிய கார் விற்பனை சந்தையைக் கொண்டுள்ள நாடு சீனா, பல புதிய மாற்றங்களை எதிர்கொண்டு வரும் சீன ஆட்டோமொபைல் சந்தை தற்போது வோக்ஸ்வாகன் உடன் கூட்டணி சேர்ந்து பறக்கும் காரை தயாரிக்கக் களத்தில் இறங்கியுள்ளது. சமீபத்தில் டெஸ்லாவிற்கு இணையாக NIO என்ற எலக்ட்ரிக் வாகன நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications