ஒருபுறம் போர் , ஏவுகணை வீச்சு, எரிசக்தி தட்டுப்பாடு என உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று 50000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து பேரதிர்ச்சியை தந்துள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களிடம் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த வாகன உற்பத்தி துறையுமே அதிர்ச்சி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் அதாவது அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 50 ஆயிரம் பேரை படிப்படியாக வேலையில் இருந்து தூக்கப் போவதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் லாபம் கணிசமான அளவு குறைந்தது இந்த திடீர் பணி நீக்க முடிவுக்கு காரணம் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது.
உலக சந்தையில் தற்போது கடுமையான போட்டியை எதிர்கொண்டு இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். குறிப்பாக சீன நாட்டு மின்சார வாகனங்கள் அதிக அளவில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐரோப்பிய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படும் கார்களாக சீனாவின் பிஒய்டி கார்கள் இருக்கின்றன. விலை குறைவான சீன கார்கள் சந்தையில் விற்பனைக்கு வந்தது, கார் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்தது, மற்றொருபுறம் அமெரிக்க அரசு மாறி மாறி விதிக்கக்கூடிய இறக்குமதி வரி இவை அனைத்துமே ஒட்டுமொத்தமாக ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லாபத்திலேயே கை வைத்து விட்டன.
இதன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாக கூறி இருக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 50,000 பேரை வேலையில் இருந்து தூக்குவதாக அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதி இருக்கக்கூடிய ஆண்டு அறிக்கையில் ஃவோஸ்வேகன் சிஇஓ இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் சுமார் 15 பில்லியன் யூரோக்களை சேமிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதியில் தொழிலாளர் யூனியன்களோடு ஒப்பந்தம் செய்தது. அதில் 2030 ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் ஊழியர்கள் வரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தது தற்போது அந்த எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது.
நிறுவனத்தின் வாகன உற்பத்தி பிரிவு என மட்டும் இல்லாமல் மென்பொருள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுமே இந்த பணிநீக்கத்தால் வேலையை இழக்க உள்ளனர். பல ஆண்டுகாலமாக ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் தான் உலக சந்தையில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது ஆனால் அண்மை காலமாக அதன் ஆதிக்கம் குறைந்துவிட்டது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications