ஜெர்மனி: உலக புகழ்பெற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியில் இருக்கும் தங்களுடைய ஆலையை மூடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உலக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் செயல்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருக்கும் தங்களுடைய மிகப்பெரிய உற்பத்தி ஆலையை மூடுவது தவிர்க்க முடியாததாக மாறி இருப்பதாக கூறுகிறது. உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஃபோக்ஸ்வேகன். இந்த நிறுவனம் தங்களுடைய 87 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக சொந்த நாட்டில் இருக்கும் மிகப்பெரிய ஆலையை மூடுவதாக முடிவெடுத்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தைப் பொறுத்தவரை தற்போது சந்தையில் மிகப்பெரிய போட்டியை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளன. இதனை அடுத்து செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு ஜெர்மனியில் இருக்கும் தங்களுடைய ஆலையை மூடுவதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அது மட்டுமின்றி இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அளித்திருந்த பணி பாதுகாப்பு என்ற வாக்குறுதியையும் முதன்முறையாக மீற இருக்கிறது. தற்போது நிறுவனத்தின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றும் சிக்கன நடவடிக்கையை எடுப்பதை தவிர வேறு வாய்ப்புகள் தங்களிடம் இல்லை என்றும் ஸ்போக்ஸ்வேகன் நிறுவனம் கூறியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திடீரென ஆலையை மூடி ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெர்மனியை சேர்ந்த தொழிலாளர்கள் யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே ஐரோப்பிய வாகன உற்பத்தி சந்தை மிக மோசமான நிலையில் இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆலிவர் ப்ளூம் தெரிவித்துள்ளார். தற்போது வாகன உற்பத்தி துறையில் ஆசிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் கடுமையான போட்டி ஏற்பட்டு ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் சற்றே பின் தங்கி இருப்பதாகவும் அவ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை சரி செய்வதற்கு ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக ஐரோப்பிய சந்தையில் தங்களது கார்களுக்கான தேவை கணிசமான அளவு குறைந்திருக்கிறது என்றும் மின்சார வாகனங்களின் விற்பனை மோசமான நிலையில் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஸ்கோடா, ஆடி, லம்போர்கினி , டுகாட்டி உள்ளிட்ட 10 முன்னணி கார் பிராண்டுகளை சொந்தமாக நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் அவர்களில் 3 லட்சம் பேர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications