Recommended Video
கடந்த மூன்று நாட்களாகத் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் 7 - 8 பைசா வரைக்கும் விலை அதிகரித்து இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசலுக்கான விலை 9 - 10 பைசா வரை அதிகரித்து இருக்கிறது.
கடந்த 15 நாட்களாக ஒரு பைசா கூட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையவில்லை என்பதும் மக்கள் மத்தியில் ஒரு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் கடந்த செப்டம்பர் 14, 2019 அன்று சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் தான்.

இந்த ட்ரோன் தாக்குதல் நடந்து முடிந்த சில நாட்களிலேயே "ஈரானை முறையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கச்சா எண்ணெய் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும். இந்த விலை அதிகரிப்பை நம் வாழ்நாளில் பார்க்காத அளவுக்கு விண்ணைத் தொடும்" எனவும் எச்சரித்தது சவுதி அரேபியா. இவர்கள் எச்சரிப்பதற்கு முன்பே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.42 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 67.33 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 77.10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 69.75 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
மும்பை ஒரு லிட்டர் பெட்ரோல் 80.08 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 70.64 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை ஒரு லிட்டர் பெட்ரோல் 77.36 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 71.19 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த செப்டம்பர் 17, 2019-ல் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை 2 ரூபாய் 25 பைசா வரை அதிகரித்து இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசலுக்கு ஒரு ரூபாய் 75 பைசா வரை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.72 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது. ஒருவேளை சவுதி எச்சரிப்பது போல கச்சா எண்ணெய் விலையை ஏற்றத் தொடங்கினால், பலத்த அடி வாங்கும் எண்ணெய் இறக்குமதி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications