உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட் தனக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் மற்றும் தன்னுடைய நிறுவனத்தை யார் நிர்வாகம் செய்யப் போகிறார் என்பன உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் நன்றி தெரிவிக்கும் விதமாக வாரன் பஃபெட் தன்னுடைய பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன பங்குகளை தனது குடும்பத்திற்கு சொந்தமான நான்கு அறக்கட்டளைகளுக்கும் வழங்குவார்.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிறுவன பங்குகளை தன் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு அறக்கட்டளைகளுக்கும் அவர் வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து தன் நிறுவன பங்குதாரர்களுக்கு வாரன் பஃபெட் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்.
தற்போது 94 வயது ஆகக்கூடிய வாரன் பஃபெட், தனக்குப் பிறகு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது தனக்கு உதவியாளராக இருக்கக்கூடிய கிரேக் ஏபில் செயல்படுவார் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய சொத்துக்கள் எப்படி தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என்றும் அவர் விரிவாக கூறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது வாரன் பஃபெட் ஏழாவது இடத்தில் இருக்கிறார். அவரிடம் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன . தான் இறந்த பிறகு தன்னுடைய சொத்தில் 99.5% சொத்துக்கள் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் என்றும் அந்தப் பணிகளை தன்னுடைய மூன்று பிள்ளைகளும் கவனித்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இவரது குடும்பத்தினர் மொத்தம் நான்கு அறக்கட்டளைகளை நடத்தி வருகின்றனர். தற்போது இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களது வயது 71 ,69 மற்றும் 66 ஆகும்.
தான் இறந்த பிறகு சொத்துக்களை பிரித்து அறக்கட்டளைகளுக்கு வழங்குவதற்கு தன்னுடைய குழந்தைகளுக்கு 10 ஆண்டுகாலம் இவர் வழங்கியிருக்கிறார். ஒருவேளை பத்து ஆண்டுகளுக்குள் இதனை மேற்கொள்ள அவர்களால் முடியவில்லை என்றால் அதற்காக மெண்டார்களையும் நியமனம் செய்திருக்கிறார். ஆனால் அவர்களின் பெயரை வாரன் பஃபெட் வெளியிடவில்லை.
பெற்றோர் தாங்கள் உயிருடன் இருக்கும் போதே பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்து அதற்கான உயிலை எழுதி வைத்து விட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ள வாரன் பஃபெட், உயிலை எழுதும்போது குழந்தைகளை அழைத்து அவர்களிடம் உங்களுடைய சொத்து எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் அதனை ஏன் இப்படி பிரிக்கிறீர்கள் என்பது குறித்து உரிய விளக்கத்தை அளித்து விட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
ஏனெனில் இது போன்ற அதிக சொத்து உடைய ஒரு நபர் இறந்த பிறகு அவர்களின் குடும்பத்தில் அந்த சொத்தின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன, பிள்ளைகள் பிரிந்துவிடுகிறார்கள், அதனை தவிர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை என கூறியுள்ளார். அதற்கு சொத்து தொடர்பான உயிலை எழுதி வைக்கும்போதே பெற்றோர் பிள்ளைகளிடம் அது தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கி விட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications