உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட் தன்னுடைய பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனத்தின் மூலம் சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து உலக பணக்காரராக உயர்ந்தவர். பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் வாரன் பஃபெட் இந்த 60 ஆண்டுகளில் அமெரிக்க பங்குச்சந்தையை விட அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக பெர்க்ஷயர் ஹேத்வேவை மாற்றி இருக்கிறார்.
168.2 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்போடு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் வாரன் பஃபெட். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்களுக்கு எல்லாம் இவர் தான் வழிகாட்டி. 1965 ஆம் ஆண்டு திவால் நிலையிலிருந்து துணிமணி உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமான பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனத்தை பஃபெட் விலைக்கு வாங்கினார். இதனை அடுத்து அதனை பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமாக மாற்றினார்.

தற்போது உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமாக பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனம் உயர்ந்திருக்கிறது. 1964ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்நிறுவனத்தின் மதிப்பு 5.5 மில்லியன் சதவீதம் லாபம் தந்திருக்கிறது. அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான எஸ்&பி 500 இன்டெக்ஸை விட 140 மடங்கு வாரன் பஃபெட் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.
வாரன் பஃபெட் நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துபவர் எனவே அவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் எனும் போது அந்த நிறுவனம் எந்த துறை சார்ந்து இயங்குகிறது, அந்த துறைக்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்த பிறகுதான் அதில் காலடி எடுத்து வைப்பார். இந்த உத்தி தான் அவரின் வெற்றிக்கு காரணம்.
1964 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் வரை ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனத்தின் மதிப்பையும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான எஸ்&பி 500 இன்டெக்ஸ் வளர்ச்சியையும் பார்க்கும்போது நமக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்படுகிறது. இத்தனை ஆண்டுகளில் எஸ்&பி 500 குறியீடு 39,054 சதவீதமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் பெர்க்ஷயர் ஹேத்வே நிறுவனம் 55,02,284 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையை விட 140 மடங்கு இது அதிக வளர்ச்சி. வாரன் பஃபெட்டே கடந்த 2024 ஆம் ஆண்டு நிறுவன பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டு இருக்கிறார். எஸ்&பி 500 இண்டெக்ஸ் என்பது அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான நிறுவனங்களின் குறியீடு ஆகும். வாரன் பஃபெட் கடந்த 60 ஆண்டுகளில் அனைத்து அமெரிக்க நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி தன்னுடைய முதலீட்டு நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்திருக்கிறார்.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications